குறிச்சொல்: Actor vijay sethupathi

விஜய் மனதில் அட்லி இட்லி ஆன கதை

விஜய் மனதில் அட்லி இட்லி ஆன கதை

சற்றுமுன்
விஜய் தற்போது நடித்துவரும் படத்தை அட்லி இயக்குகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் தற்போது கடும் வெயில் கொளுத்திவருகிறது. இதனால் பாடல் காட்சியை வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் கூறியதாகவும் ஆனால் அதனை ஏற்க அட்லி மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அட்லி மீது தயாரிப்பாளர் தரப்பிலும் விஜயிடம் புகார் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் விஜய் அட்லி மீது கோபத்தில் உள்ளாராம். விஜயின் பரிந்துரையின்பேரிலேயே இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. அதுமட்டுமின்றி முன்னனி நாயகன் பரிந்துரை செய்ததால் தனது சம்பளத்தையும் பயங்கரமாக உயர்த்தி வாங்கியதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
நயன்தாராவுடன் மோதும் விஜய் சேதுபதி..

நயன்தாராவுடன் மோதும் விஜய் சேதுபதி..

பிற செய்திகள்
நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த திரைப்படங்கள், ஒரே நாளில் வெளியாகி மோதும் சுழ்நிலை உருவாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ஒன்றாக இணைந்து ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தனர். அப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படமும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் டி. ராஜேந்தர் ஆகியோர் நடித்துள்ள கவண் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.இதில் டோரா படம் பேய் படமாகும். கவண் ஒரு ஜனரஞ்சகமான படம் ஆகும். இந்த இரண்டு படங்களும் வருகிற மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது. எனவே, இந்த 2 படங்களும் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.