குறிச்சொல்: Actress

நடிகை உடைமாற்றியதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு தர்ம அடி

நடிகை உடைமாற்றியதை வீடியோ எடுத்த இளைஞனுக்கு தர்ம அடி

சற்றுமுன், சின்னத்திரை
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடப்பது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் ஒரு பிரபல நடிகை நடித்த தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததும் அந்த நடிகை உடை மாற்றுவதற்காக ஒரு அறைக்கு சென்றார். அப்போது மறைந்திருந்த வாலிபர் ஒருவர் அந்த நடிகையை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது இதனை கண்டு அலறிய அந்த நடிகையின் கூச்சலை கேட்டு படக்குழுவினர் விரைந்து வந்து அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரின் செல்போன் அடித்து நொறுக்கப்பட்டதோடு, அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஆனாலும் இதுகுறித்து நடிகையின் தரப்பில் போலீஸ் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ‘பாபநாசம்’ படத்தில் நடித்த குட்டிப்பாப்பாவா?

இது ‘பாபநாசம்’ படத்தில் நடித்த குட்டிப்பாப்பாவா?

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன், கெளதமி நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாகநடித்த குட்டிப்பாப்பா எஸ்தரை யாரும் மறந்திருக்க முடியாது. போலீஸ் விசாரணை காட்சியின்போது அற்புதமாக எஸ்தர் நடித்திருப்பார் இந்த நிலையில் தற்போது எஸ்தர் நன்றாக வளர்ந்து கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு அழகிய தோற்றத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் எஸ்தர் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தினால் இவருக்கு ஒரு மலையாள பட வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் பெரிய பெண்ணாக வளர்ந்து விரைவில் நாயகியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியை பார்த்தோம்
38 வயது அழகிய பெண் தேவை: பார்த்திபன் கொடுத்த விளம்பரம் எதற்காக தெரியுமா?

38 வயது அழகிய பெண் தேவை: பார்த்திபன் கொடுத்த விளம்பரம் எதற்காக தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபன் தற்போது 'உள்ளெ வெளியே 2' படத்தை இயக்கவுள்ளார். முதல் பாகம் போலவே இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள பார்த்திபன், இந்த படத்திற்காக மூன்று நடிகைகளை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தனது டுவிட்டரில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 2. 0. 1. 8-ன் 18-ல் துவங்கும் 'உள்ளெ வெளியே' 18-ற்கான commercial comedy thriller படத்திற்கு 18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும், 28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும், 38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965 https://twitter.com/rparthiepan/status/949497316414648322
எல்லோரும் ஃபீல்டிங் செய்யும்போது நடிகைகளிடம் கடலை போட்ட ஆர்யா

எல்லோரும் ஃபீல்டிங் செய்யும்போது நடிகைகளிடம் கடலை போட்ட ஆர்யா

சற்றுமுன், செய்திகள்
மலேசியாவில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடிகர்கள் விறுவிறுப்புடன் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் நடிகர்கள் அனைவரும் மும்முரமாக பீல்டிங் செய்து கொண்டிருக்க காதல் மன்னன் ஆர்யா மட்டும் மைதானத்தில் எல்லையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நடிகைகளிடம் கடலை போட்டு கொண்டிருந்தார். அவர் பக்கம் பந்து வரவில்லை என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்தவுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 'பாஸ், இந்த பக்கம் திரும்பி உட்காருங்கள்' என்பது போன்ற வாசகங்களுடன் மீம்ஸ்களை வெளியிட்டு தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்
பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு அரை கோடியா?

பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு அரை கோடியா?

சற்றுமுன், செய்திகள்
ரஜினி, விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக இவர் அரைநிர்வாண போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த போஸ் கொடுக்க ஸ்ரேயாவுக்கு அரை கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போஸ் அவருக்கு மீண்டும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளதாகவும் தெலுங்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எப்படியும் தென்னிந்திய திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஸ்ரேயா அடுத்த லெவல் போஸ் கொடுக்கவும் தயங்க மாட்டார் என்றே திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
நடிகை வரலட்சுமியை பார்த்து காப்பி அடித்த ஹாலிவுட் நடிகைகள்

நடிகை வரலட்சுமியை பார்த்து காப்பி அடித்த ஹாலிவுட் நடிகைகள்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களின் பாதுகாப்பிற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார், சேவ் சக்தி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரலட்சுமி ஆரம்பித்தது போலவே ஹாலிவுட் நடிகைகள் இணைந்து அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பு நடிகைகள், உள்பட பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஹாலிவுட் நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு தமிழ் நடிகையின் ஆலோசனை ஹாலிவுட்டிலும் பின்பற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமைதான் என்பது குறிப்பி
வாய்ப்புக்காக நடிகர்களும் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்களா? விஜய் நாயகி அதிர்ச்சி தகவல்

வாய்ப்புக்காக நடிகர்களும் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்களா? விஜய் நாயகி அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட் திரையுலகம் வரை வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டமான நிலை இருப்பது குறித்து அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகையும், விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் நடித்தவருமான பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். ஆரம்பகட்டத்தில் தன்னையும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு ஒருசிலர் கட்டாயப்படுத்தியதாகவும், ஆனால் தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் பிரியங்கா சோப்ரா திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார் மேலும் சினிமாத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் வாய்ப்புக்காகவும், புரமோஷனுக்காகவும் படுக்கையை இருபாலரும் பகிர்ந்து கொள்ளும் அவலம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்க்கெட் போன பின்னர் என்ன செய்ய வேண்டும்? காஜல் அகர்வால் யோசனை

மார்க்கெட் போன பின்னர் என்ன செய்ய வேண்டும்? காஜல் அகர்வால் யோசனை

சற்றுமுன், செய்திகள்
திரையுலகில் நடிகர்கள் 25 வருடம் கூட ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் நடிகைகள் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் ஹீரோயினியாக நீடித்திருந்தாலே அபூர்வம். நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் விதிவிலக்கு இந்த நிலையில் நடிகைகள் நடிக்கும்போதே பணத்தை சேர்த்து வைத்து வேறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் மார்க்கெட் போன பின்னர் நிரந்தரமாக அந்த தொழிலை மேம்படுத்தலாம் என்றும் காஜல் அகர்வால் அறிவுரை கூறியுள்ளார் இதன்படி தான் ஏற்கனவே வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் முழுநேர தொழிலதிபராக மாறிவிடுவேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
‘அருவி’ நாயகி அதிதிபாலனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த தங்கப்பரிசு

‘அருவி’ நாயகி அதிதிபாலனுக்கு ரஜினிகாந்த் கொடுத்த தங்கப்பரிசு

சற்றுமுன், செய்திகள்
அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைப்பேசியில் அழைத்து ஏற்கனவே பாராட்டியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதீதிபாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார். அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபுவையும் வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதை கேட்டுள்ளார். அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார். இயக்குநர் அருண்பிரபுவிடம் சூப்பர்ஸ்டார்
அருவி’யை ஆஹா ஓஹோ என புகழ்ந்த ரஜினிகாந்த்

அருவி’யை ஆஹா ஓஹோ என புகழ்ந்த ரஜினிகாந்த்

சற்றுமுன், செய்திகள்
கடந்த வெள்ளியன்று வெளியான அருவி படத்திற்கு விஜய் ரசிகர்களும், விஜய்யை நம்பி வாழும் ஒருசில புரமோட்டர்களும் மட்டுமே குறை கூறி வருகின்றனர். இவர்கள் ஏன் குறை கூறி வருகின்றனர் என்பது படம் பார்த்தவர்களுக்கு விளங்கும் இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் எதிர்க்கும் இந்த படத்தை நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளார். அருவி இயக்குனர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து படத்தை பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்ததாகவும், சுமார் அரை மணி நேரம் இந்த படம் குறித்து ரஜினிகாந்த் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அருவி இயக்குனர் அருண்பிரபு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. திரு. ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.