குறிச்சொல்: admk

அந்த ஏ சான்றிதழ் படம்தான் நாஞ்சில் சம்பத்துக்கு பிடித்த படமாம்

அந்த ஏ சான்றிதழ் படம்தான் நாஞ்சில் சம்பத்துக்கு பிடித்த படமாம்

சற்றுமுன், செய்திகள்
அதிமுக முக்கிய பேச்சாளர் நாஞ்சில் சம்பத். இவரது பேச்சு பலராலும் ரசிக்கும்வகையில் இருக்கும். அதேசமயம் சமூக வலைதளங்களில் அதிக கிண்டலுக்கும் ஆளானவர். ஆனால் எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாதது அவரது சிறப்பு.  இவர் கடைசியாக பார்த்தப்படம் திரிஷா இல்லனா நயன்தாராவாம். தனியார் தொலைக்காட்சி  ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, பொதுவாக தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் கிடையாது.மகன் வற்புறுத்தியதால் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். நகைச்சுவையுடன் அந்த படம் இருந்ததால் படம் பிடித்திருந்தது என்றார்.
காறி துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன். நாஞ்சில் சம்பத்

காறி துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன். நாஞ்சில் சம்பத்

சற்றுமுன்
அதிமுகவின் சர்ச்சைக்குரிய தலைவர், காமெடி தலைவர் என்ற பெயரை மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியில் எடுத்தவர் நாஞ்சில் சம்பத். இவருடைய பேச்சுக்களை கலாய்ப்பது என்பது மிமி கிரியேட்டர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு இந்த நிலையில் இன்று சன் டிவியில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் வலிய வந்து மிமி கிரியேட்டர்களிடம் சிக்கியுள்ளார். இவர் எந்த அளவு சின்னாபின்னாமாகவுள்ளார் என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் கூறியதாவது: சசிகலாவும், தினகரனும் மட்டுமே என்னுடைய தலைவர்கள். டிடிவி தினகரன் நன்றாக இருந்தால்தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நன்றாக இருக்கும். கடைசி வரை தினகரன் பக்கமே இருப்பேன். என் முடிவை யாராவது கேலி செய்து காறித்துப்பினாலும் துடைத்து கொண்டு போய்க்கொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஓ.,பன்னீர்செல்வம் முன் நிற்க வேண்டிய நிலை ஏற்பட
சசிகலாவை சந்தித்த அஜித்- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சசிகலாவை சந்தித்த அஜித்- அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பிற செய்திகள்
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.  இதையடுத்து அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வருத்துவருகின்றனர். ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் எதிர்ப்புகளும் பலமாகவே உள்ளது. இந்த பரபரப்பு சூழ் நிலைக்கு மத்தியில் வருகிற 29ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் போயஸ் கார்டன் சென்று அங்கு சசிகலாவை சந்தித்தார்.ஆனால் இந்த தகவல் அஜித் தரப்பிலிருந்தோ அல்லது அதிமுக தரப்பிலிருந்தோ உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக ஜெயலலிதா உடல் அடக்கம் செய்தபோது நடிகர் அஜித் பல்கேரியாவில் இருந்தார். பின்னர் உடனடியாக கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து மெரிஅவில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.