குறிச்சொல்: aiswarya

இரண்டாவது மகளையும் தொழிலில் இறக்கிவிட அர்ஜூன் முடிவா?

இரண்டாவது மகளையும் தொழிலில் இறக்கிவிட அர்ஜூன் முடிவா?

சற்றுமுன், செய்திகள்
ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆகவே, தற்போது அவரே ஐஸ்வர்யா நடித்துள்ள ஒரு படத்தை இயக்கியுள்ளார். 'சொல்லிவிடவா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அர்ஜூனின் இரண்டாவது மகளும் வந்திருந்தார் முதன்முதலில் அர்ஜூன் தனது இரண்டாவது மகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவரையும் சினிமா தொழிலில் இறக்கிவிட அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மனைவியா? மச்சினியா? யார் பெஸ்ட்: தனுஷ் கூறிய வித்தியாசமான பதில்

மனைவியா? மச்சினியா? யார் பெஸ்ட்: தனுஷ் கூறிய வித்தியாசமான பதில்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' என்ற படத்திலும் மச்சினி செளந்தர்யா இயக்கத்தில் 'விஐபி 2' என்ற படத்திலும் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரு மகள்கள் படத்திலும் நாயகனாக நடித்த ஒரே நடிகர் என்ற வகையில் அவரிடம் செய்தியாளர்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய இருவரில் இயக்குனராக யார் பெஸ்ட் என்ற கேள்விக்கு அவர் சாதுர்யமாக பதிலளித்துள்ளார். 'ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவருமே திறமையானவர்கள் என்றும் சூப்பர் ஸ்டாரின் மகள்களான இருவரும் கலை நுணுக்கம் அறிந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.