குறிச்சொல்: ajay gnanamuthu

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் கதை என்ன தெரியுமா?

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் கதை என்ன தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
'டிமாண்ட்டி காலனி' இயக்குனர் அஜய்ஞானமுத்துவின் இரண்டாவது படமான 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஒன்லைன் கதை குறித்து அஜய்ஞானமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த படத்தில் ஒருபக்கம் மர்ம தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு விதத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அதர்வா-ராஷிகண்ணாவின் ஜோடியின் ஜாலிக்கதை போய் கொண்டிருக்கும். இந்த இரண்டும் அதாவது தொடர் கொலையும், ஜாலி ஜோடியும் இணையும் இடத்தில் ஒரு டுவிஸ்ட் ஏற்படுகிறது. அதுதான் இந்த படத்தின் மையப்புள்ளி. அந்த மையப்புள்ளியில் இருந்து தோன்றும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை. இந்த தொடர் கொலையால் அதர்வா-ராஷிகண்ணா ஜோடி ஏன் பாதிப்பு அடைகின்றனர், அந்த பாதிப்பில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை த்ரில்லுடன