குறிச்சொல்: ajith 58

100வது நாள் ‘விவேகம்’ கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

100வது நாள் ‘விவேகம்’ கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் ஒருசில வீடியோ காட்சிகளை டுவிட்டரில் பதிவு செய்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அஜித்தின் விவேகம் டுவிட்டரில் உலக அளவில் ஒருசில மணி நேரம் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறைந்த பட்ஜெட்: தீபாவளி ரிலீஸ்: அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்

குறைந்த பட்ஜெட்: தீபாவளி ரிலீஸ்: அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தின் 58வது படத்தையும் இயக்குனர் சிவா இயக்குகிறார். ஆனால் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் கிராமத்தில் நடக்கும் செண்டிமெண்ட் கலந்த கதை. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்குவதாகவும், இந்த படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்?

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்?

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்த 56வது மற்றும் 57வது படங்களான 'வேதாளம்' மற்றும் 'விவேகம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தின் 58வது படத்தையும் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மட்டும் உண்மையாக இருந்தால் முதல்முறையாக தொடர்ச்சியாக மூன்று அஜித் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை சிறுத்தை சிவாவுக்கு சேர்கிறது 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ஐரோப்பாவிற்கு அஜித், விவேக் ஓபராய், சிவா ஆகியோர் சென்றிருக்கும் நிலையில் அஜித்துக்கு மேலும் ஒரு கதையை சிவா கூறியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதால் அடுத்த படத்தையும் அவரே இயக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கொண்ட ஜாலியான படம் என்றும் அஜித் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருமுழுநீள குடும்பக்கதையில்  நடிக்கவு