குறிச்சொல்: ajith fans

உலகில் முதல்முறையாக 5 அடி உயரத்தில் அஜித் படம் போட்ட காலண்டர்

உலகில் முதல்முறையாக 5 அடி உயரத்தில் அஜித் படம் போட்ட காலண்டர்

சற்றுமுன், செய்திகள்
2017ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டின் காலண்டர் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 5 அடி உயர காலண்டர் ஒன்று சாதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக 5 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காலண்டரில் அஜித்தின் படம் உள்ளது. இந்த காலண்டரை அஜித் ரசிகர்கள் வீதிமுழுவதும் சுற்றி வந்து காண்பித்தனர். இந்த காலண்டரை சென்னையை சேர்ந்த சரித்திர நாயகன் தல அஜித் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவின் தைரியமான முடிவுகளை மிகவும் துணிச்சலாக எடுப்பவர்.அஜித்தை எத்தனை சிவா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கசொல்லுங்கள், ஆனால், கேப் வேண்டும் என்று கடந்த வாரம் பலரும் கூறினார்கள், ஆனால், இது அஜித் காதுகளுக்கு சென்றதா? என்று தெரியவில்லை. சரி, ஒரு சில ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டு சிவாவிடம் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளனர், அதவாது சிவா கடைப்பிடிப்பாரா? இல்லை தல கேட்பாரா? பார்ப்போம். இதில் முக்கியமாக இனி சால்ட் & பெப்பர் லுக்கே வேண்டாம், பார்த்து மிகவும் போர் அடித்துவிட்டது, தயவு செய்து அதை மாற்றுங்கள் என்று கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஹீரோவிற்கு ஓவர் மாஸ் வசனங்கள் வேண்டாம், குறிப்பாக ஹீரோவை புகழும் வில்லன் வேண்டாவே வேண்டாம். அதேபோல் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் அவசியம் தான், ஆனால், ஒ
ஓவியாவை வெளியேற்றிவிட்டு அஜித்துக்கு ஐஸ் வைக்கும் விஜய் டிவி

ஓவியாவை வெளியேற்றிவிட்டு அஜித்துக்கு ஐஸ் வைக்கும் விஜய் டிவி

சற்றுமுன், செய்திகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறிவிட்டதால் ஓவியா ஆர்மியினர்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்டு வரும் நிலையில், அந்த டிவியின் டுவிட்டர் பக்கத்தில் அஜித்துக்கு ஐஸ் வைத்துள்ளது. ஒவ்வொரு நாளும், காலை, மதியம், மற்றும் மாலை என மூன்று பிக்பாஸ் புரமோ வீடியோக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதல் ஒரு புரமோ வீடியோ கூட வெளிவரவில்லை மேலும் புரமோ வீடியோவுக்கு பதிலாக அஜித்தின் 25 ஆண்டுகால சேவைக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அஜித்துக்கு ஐஸ் வைத்து அஜித் ரசிகர்களின் ஆதரவால் ஓவியா ஆர்மியினர்களை சமாளிக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.