குறிச்சொல்: ajith

அஜித்தால் தள்ளி போகிறது அனுஷ்காவின் திருமணம்

அஜித்தால் தள்ளி போகிறது அனுஷ்காவின் திருமணம்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை அனுஷ்காவின் திருமணத்தை பாகுபலி படங்களின் இரு பாகங்கள் முடிந்தவுடன் நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்திருந்தனர். ஆனால் 'பாகமதி' படத்தில் மீண்டும் அவர் கமிட் ஆனதால் இந்த படம் முடியும் வரை காத்திருந்தனர். இந்த நிலையில் 'பாகமதி'யும் முடிந்துவிட்டதால் இந்த ஆண்டுக்குள் அனுஷ்காவின் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் நாயகி கேரக்டருக்காக அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் அனுஷ்காவின் திருமணம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் என கருதப்படுகிறது அஜித், அனுஷ்கா நடித்த 'என்னை அறிந்தால்' சூப்பர் ஹிட் ஆனதால் மீண்டும் இதே ஜோடி திரையில் தோன்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் தற்போதைய நிலை
கேள்வியை முடிக்கும் முன்பே ‘அஜித்’ என்று பதிலளித்த நயன்தாரா

கேள்வியை முடிக்கும் முன்பே ‘அஜித்’ என்று பதிலளித்த நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அஜித்துக்குத்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலரும் அஜித்துக்கு ரசிகர், ரசிகைகளாக உள்ளனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நயன்தாராவிடம் செய்தியாளர்கள் 'உங்களுக்கு பிடித்த நடிகர்' யார் என்ற கேள்வியை கேட்டனர். ஆனால் நிருபர் கேள்வியை முடிப்பதற்குள் ஒரு நொடி கூட யோசிக்காமல் 'அஜித்' என்று நயன்தாரா பதிலளித்தார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்துடன் நயன்தாரா, பில்லா, ஏகன், ஆரம்பம் என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

அஜித் படத்திற்கு ஆப்பு வைத்தாரா விஜய்?

சற்றுமுன், தமிழகம்
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. வேலைக்காரன் படத்தின் ஹிட்டை தொடர்ந்து அஜித்துடன் மோகன் ராஜா இணைந்தால் அந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கோலிவுட்டில் கூறப்பட்டது இந்த நிலையில் திடீரென மோகன்ராஜாவை இன்று சந்தித்த தளபதி விஜய், 'வேலாயுதம் 2' படத்திற்கான கதையை தயார் செய்யும்படியும் முருகதாஸ் படத்தை அடுத்து வேலாயுதம் 2' படத்தை தொடங்கலாம் என்று விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜித்துக்கான திரைக்கதையை தயாரிக்கும் பணியை மோகன்ராஜா நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தல அஜித்: வைரலாகும் புகைப்படம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தல அஜித்: வைரலாகும் புகைப்படம்

சற்றுமுன், செய்திகள்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் சீறிப்பாய்ந்தது. இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனது காளையை மைதானத்திற்கு கொண்டு வரும்போது அந்த காளையின் மீது அஜித்தின் புகைப்படத்தை வைத்து கொண்டு வந்தார். அப்போது பலர் அஜித் புகைப்படத்துடன் கூடிய காளையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர் இந்த புகைப்படம் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருவதோடு மிக அதிகமானோர் ஷேர் செய்தும் வருகின்றனர்.
இதுவரை வெளிவராத காஜல் அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள்

இதுவரை வெளிவராத காஜல் அகர்வாலின் கலக்கல் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
கடந்த் ஆண்டு அஜித், விஜய் உள்பட பெரிய நடிகர்களின் நாயகியான காஜல் அகர்வாலின் இதுவரை வெளிவராத கலக்கலான புகைப்படங்கள் இதோ:
விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

விஜய்க்கு கொடுத்த விருதை பிடுங்கி அஜித்துக்கு கொடுத்த நெட்டிசன்கள்

சற்றுமுன், செய்திகள்
பிரபல பத்திரிகையான விகடன், 2017ஆம் ஆண்டிற்கான திரை நட்சத்திரங்களுக்கான விருதுகளை சற்றுமுன் அறிவித்தது. இதன்படி சிறந்த நடிகருக்கான விருது இளையதளபதி விஜய்க்கு கிடைத்தது என்பதை சற்றுமுன் பார்த்தோம் இந்த நிலையில் இந்த அறிவிப்பில் இருந்த விஜய் பெயரை எடுத்துவிட்டு அதில் அஜித் என்று பதிவு செய்து மெர்சல் படத்திற்கு பதிலாக விவேகம் படத்தை மாற்றி நெட்டிசன்கள் தங்கள் சேட்டையை ஆரம்பித்துள்ளனர். அச்சு அசலாக விகடன் பெயரில் ஒரு டுவிட்டர் அக்கவுண்டையும் ஆரம்பித்து இதை பதிவுசெய்துள்ளனர். இந்த இரண்டையும் மாறி மாறி பார்த்து வரும் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மக்களிடம் ஏன் பணம் வசூலிக்க வேண்டும்? நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அஜித் கேட்ட அதிரடி கேள்வி

மக்களிடம் ஏன் பணம் வசூலிக்க வேண்டும்? நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அஜித் கேட்ட அதிரடி கேள்வி

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு நிதி திரட்ட கடந்த ஆண்டு சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்திய நடிகர் சங்கம் தற்போது மலேசியாவில் பிரமாண்டமான கலைவிழாவை நடத்தியது இந்த கலைவிழாவில் ஓரளவுக்கு டிக்கெட் பணம் வசூலானாலும், நடிகர் ,நடிகையர்களின் விமான செலவு, ஓட்டலில்தங்கும் செலவு மற்றும் பல செலவுகளால் பெரிதாக நிதி சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்திடம் இந்த கலைவிழாவில் கலந்து கொள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தபோது, 'பொதுமக்கள் தரும் டிக்கெட் பணத்தில்தான் நாம் சம்பாதிக்கின்றோம். பிறகு ஏன் நடிகர் சங்க கட்டிடத்திற்கும் அவர்களிடமே நிதி கேட்க வேண்டும்? நாமளே நிதி கொடுக்கலாமே? என்று கூறியிருக்கின்றார். ஆனால் அஜித்தின் யோசனையை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

சிங்கத்தை பட்டியலில் இருந்து வெளியேற்றிய வேலைக்காரன்

சற்றுமுன், செய்திகள்
இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த ஐந்து படங்களின் பட்டியலாக பாகுபலி, மெர்சல், விவேகம், பைரவா, சிங்கம் ஆகிய படங்கள் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சூர்யாவின் சிங்கம் படத்தை இந்த பட்டியலில் இருந்து வெளியேற்றி 5வது இடத்தை பிடித்து கொண்டது. இன்னும் ஒருசில நாட்களுக்கு முன்பு வேலைககான் படம் வெளியாகியிருந்தால் விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் விவேகம் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியிருக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

சற்றுமுன், செய்திகள்
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் கடந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகி இரண்டு வாரங்கள் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் சென்னை வசூல் மட்டும் இரண்டு வாரங்களில் ரூ.8 கோடியை தாண்டிவிட்டது. சென்னையை பொருத்தவரையில் அஜித், விஜய் படங்கள் மட்டுமே ரூ.10 கோடி என்ற இலக்கை சர்வசாதாரணமாக தொட்டுவிடும். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் ரூ.10 கோடி வசூலை நெருங்கிவிட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளதாக கோலிவுட் திரையுலகம் கூறி வருகிறது.அவருடைய சம்பளமும் எகிறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அஜித்துக்கு கைதட்டி உடனே அவரையும் அரசியலுகு இழுத்திராதிங்க: அன்புமணி

அஜித்துக்கு கைதட்டி உடனே அவரையும் அரசியலுகு இழுத்திராதிங்க: அன்புமணி

சற்றுமுன், செய்திகள்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் கருப்பு பணமாகத்தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள். இவர்கள் கட்சி ஆரம்பித்து எப்படி நேர்மையான அரசியலை தரமுடியும். எனக்கு தெரிந்து ஒரே ஒரு நடிகர், அஜித்தை தவிர வேறு யாரும் ஒழுங்காக வரி செலுத்துவதில்லை என்று கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் கைதட்ட, உடனே கடுப்பான அன்புமணி, 'உடனே கைதட்டி அவரையும் அரசிலுக்கு இழுத்திராதிங்க, நடிகர்களுக்கு கைதட்டி கைதட்டிதான் நாடு நாசமா போச்சு என்று கூறினார்.