குறிச்சொல்: Amalapal

வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் அதில் நடிக்க இருந்த சமந்தா அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார். மேலும், தனுஷ், கொடி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பின் விஐபி 2 படத்தில் நடித்து முடித்தார். கூடவே பவர்பாண்டி படத்தையும் இயக்கி முடித்தார். தற்போது ப.பாண்டி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, வட சென்னை படத்தின்
அந்த விஷயத்தில் தனுஷ்தான் என் சாய்ஸ் – நடிகை அமலாபால் ஓபன் பேட்டி

அந்த விஷயத்தில் தனுஷ்தான் என் சாய்ஸ் – நடிகை அமலாபால் ஓபன் பேட்டி

பிற செய்திகள்
தமிழ் நடிகர்களில் தனக்கு மிகவும் பிடித்தவர் தனுஷ்தான் என நடிகை அமலாபால் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் அமலாபால், இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்தார். அதன்பின் அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும், நடிகர் தனுஷ், அமலாபால் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் வலம் வந்தன. இந்நிலையில் நடிகர் தனுஷ் பற்றி கருத்து தெரிவித்த அமலாபால் “ நடிகர்களில் தனுஷ்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் பல திறமைகள் உள்ளன. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்வார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபத்திரங்கள்தான் நம் கண் முன்னால் வரும். அந்த அளவுக்கு அவர் திறமையான நடிகர்” என அவர் புகழ்ந்துள்ளார்.