குறிச்சொல்: annadurai

விஜய் ஆண்டனியின் முதல் ஃபிளாப் படமா அண்ணாதுரை?

விஜய் ஆண்டனியின் முதல் ஃபிளாப் படமா அண்ணாதுரை?

சற்றுமுன், செய்திகள்
பிரபல இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு முதல் நாளே கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக ஓப்பனிங் வசூல் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆன இந்த படம் ஞாயிறு வரையிலான நான்கு நாட்களில் சென்னையில் ரூ.87,96,304 மட்டுமே வசூல் செய்துள்ளது. விஜய் ஆண்டனியின் முந்தைய படங்கள் சர்வ சாதாரணமாக முதல் நாளே கோடியை நெருங்கிய நிலையில் இந்த படம் நான்கு நாட்கள் ஆகியும் ஒரு கோடி வசூலை நெருங்கவில்லை 'நான்' முதல் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களும் நல்ல வசூலை குவித்த நிலையில் அவருடைய முதல் ப்ளாப் படமாக இந்த படம் அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது
குடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி

குடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல், தன்னுடைய படத்திற்கான தலைப்பையும் வித்தியாசமாகவே தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ‘அண்ணாதுரை’ பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி குடிகாரனாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், ஆசிரியராகவும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் இரண்டு வேடங்களில் விஜய் ஆண்டனி நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைப்பதோடு இப்படத்திற்கான எடிட்டிங் பணியையும் அவரே மேற்கொள்ளவிருக்கிறார
அந்த விசயத்தில் மற்ற ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய் ஆண்டனி

அந்த விசயத்தில் மற்ற ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய விஜய் ஆண்டனி

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர் விஜய் ஆண்டனி. எத்தனை காலத்துக்குதான் இப்படி இசையமைப்பது என்ற எண்ணத்தில் நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்ததால் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் அண்ணா துரை என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. ரஜினி,கமல்,விஜய் அஜீத் போன்ற நடிகர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பே இரட்டை வேடங்களில் நடித்தனர். அந்த விசயத்தில் மற்ற ஹீரோக்களை பின்னுக்கு தள்ளினார் விஜய் ஆண்டனி.