குறிச்சொல்: Announcement

இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே!

இன்று மதியம் 2 மணிக்கு தயாராக இருங்கள் விஜய் ரசிகர்களே!

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியான நிமிடம் முதல் விஜய் ரசிகர்கள் மதியம் 2 மணியை நோக்கி காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். கடந்த சில நாட்களாகவே அஜித்தின் 'விவேகம்' மற்றூம் விஜய்யின் 'மெர்சல் ஆகிய படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. நேற்று அதிகாலை 12.01 மணிக்கு அஜித்தின் விவேகம் டிரைலர் வெளியாகிய இன்று 'மெர்சல்' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதால் அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
அவதார் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

அவதார் அடுத்தடுத்த பாகங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சற்றுமுன், செய்திகள்
உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் டிசம்பர் மாதம் 2009ல் வெளியானது. அந்த படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்தது. 237 மில்லியன் டாலரில் தயாரான அந்தப்படம் 2788 பில்லியன் டாலர் வசூல் செய்து, உலகிலேயே அதிக வசூலான படம் என்ற சாதனை படைத்தது. இதுவரை இந்த வசூலை எந்தப்படமும் முறியடிக்கவில்லை. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருகிறது என செய்திகள் வெளியானது. ஆனால், அது தற்போதைக்கு இல்லை.. இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என ஜேம்ஸ் கேம்ரூன் தொடர்ந்து கூறி வந்தார். தற்போது அடுத்த பாகங்கள் தொடர்பான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது அதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவதார் 2 - Dec 18, 2020 அவதார் 3 - Dec 1