குறிச்சொல்: apology

தனுஷ் முன்னிலையில் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு

தனுஷ் முன்னிலையில் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு

சற்றுமுன், செய்திகள்
“அன்பானவன், அசராதவன்,அடங்காதவன்' படத்தின் தோல்வியால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்றும் இந்த நஷ்டத்திற்கு நடிகர் சிம்புவே காரணம் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் தனது தவறுக்கு சிம்பு மன்னிப்பு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ளார் நேற்று நடைபெற்ற “சக்கபோடு போடுராஜா” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்ற நிலையில் அந்த மேடையில் சிம்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் பகிரங்கமாக மன்னிப்புகேட்டார். மேலும் தனக்கு ‘ரெட் கார்டு’ போட்டு நடிப்பதை தடுத்து நிறுத்தினாலும் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்து கொள்வேன் என்றும் ஆனால் ரசிகர்களிடம் இருந்து மட்டும் தன்னை யாராலும் பிரிக்க முடியாது என்றும் சிம்பு கூறினார்.
‘பாகுபலி 2’ படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ். வாட்டாள் நாகராஜ்

‘பாகுபலி 2’ படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ். வாட்டாள் நாகராஜ்

சற்றுமுன்
பாகுபலி 2' படத்தில் நடித்திருந்த சத்யராஜ் நேற்று கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்ததை அடுத்து இந்த படத்திற்கு எதிரான போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு காவிரி பிரச்சனைக்காக நடந்த ஒரு கூட்டத்தில் கன்னட மக்களை கடுமையாக விமர்சனம் செய்த சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என்று கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார். மேலும் சத்யராஜின் கொடும்பாவி எரிப்பு உள்பட பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தியது. இதனையடுத்து 'பாகுபலி 2' படத்தின் நன்மை கருதி நேற்று சத்யராஜ் ஒன்பது வருடங்களுக்கு முன் பேசிய தனது கருத்துக்கு நேற்று வருத்தம் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், அதே