குறிச்சொல்: app

தியேட்டர்கள் தேவையில்லை: ஆப் போதும்! அதிரடி முடிவு

தியேட்டர்கள் தேவையில்லை: ஆப் போதும்! அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்தபோது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே அந்த வேலைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க அதிபர்கள் திடீரென வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த வாரம் வெளியான படங்களின் நிலை பரிதாபமாகியுள்ளது. இந்த நிலையில் இனியும் தியேட்டர்களை நம்பி பிரயோஜனமில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். டிடிஎச், நேரடியாக கேபிள் டிவியில் ரிலீஸ், நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ், ஆகிய ஐடியாக்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கம் ஒரு ஆப் தயார் செய்து அதில் மாதம் ரூ.100 கட்டினால் அனைத்து திரைப்படங்களையும் பார்க்கும் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்ட