குறிச்சொல்: arjun reddy

தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மகன்

தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மகன்

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படம் தமிழில் ரீமேக்காகிறது. இதில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். துருவ் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் பெரிய திரையில் கதாநாயகனாக அவதாரமெடுக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் உரிமையை இ4 என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. துருவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விவரத்தை அவரது அப்பா விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், இப்படத்தை யார் இயக்கப் போகிறார்? இப்படத்தின் கதாநாயகி யார்? என்ற விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. கூடிய விரைவில் அதை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கியிருந்தார். படிப்பிலும், காதலிலும் தோல்வியடைந்த ஒருவன் குடிக்கு அடிமையாகி அதிலிருந்
பெயரை கெடுத்துக் கொள்ளாதீங்க- தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

பெயரை கெடுத்துக் கொள்ளாதீங்க- தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

சற்றுமுன், செய்திகள்
ஆந்திராவில் தற்போது பட்டையை கிளப்பி வரும் படம் அர்ஜூன் ரெட்டி. சுமார் 4 கோடியில் தயாரான இப்படம் கிட்டத்தட்ட 40 கோடி வரை வசூலில் கலக்கி வருகிறது. இதையடுத்து இப்படத்தின் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நடந்தது. இதில் தனுஷ் வெற்றி பெற்றார்.இப்படத்தை அவர் நடிப்பாரா இல்லை வேறு எவரையும் நடிக்க வைத்து தயாரிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த நிலையில் இப்படத்தினை பார்க்க ரஜினி வரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்காக  இப்படம் பிரத்யேகமாக காட்டப்பட்டது. படத்தின பார்த்து பாராட்டிய ரஜினி தனுஷுக்கு சில அட்வைஸ்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு நல்ல பெயர் உள்ளது என்றும் கூறினாராம். ரஜினி தனுஷுக்கு அட்வைஸ் செய்த காரணம் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஏடாகூட காட்சிகளே என்று கூறப்படுகிறது.