குறிச்சொல்: Arrest

கைதை தவிர்க்க களத்தில் இறங்கினாரா கமல்?

கைதை தவிர்க்க களத்தில் இறங்கினாரா கமல்?

சற்றுமுன், செய்திகள்
நிலவேம்பு குறித்த சர்ச்சைக்குரிய டுவீட் காரணமாக கமல்ஹாசன் மீது எந்த நேரத்திலும் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் திடீரென எண்ணூர் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறை கேட்டுள்ளார். ஏற்கனவே இந்த பகுதி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நேற்று டுவிட்டரில் எச்சரித்த கமல், இன்று அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்துள்ளார். நிலவேம்பு விஷயத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் தான் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த கமல், மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக திடீரென களம் இறங்கியுள்ளதாகவும், இத்தனை நாள் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்த அவர் இன்று திடீரென களமிறங்கியதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த தயாரிப்பாளர்…

இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த தயாரிப்பாளர்…

சற்றுமுன், செய்திகள்
சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற பெண்ணை மயக்க மருந்து கொடுத்த பலமுறை கற்பழித்த பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் மீது 25 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், சினிமா வாய்ப்பிற்காக அவரை சந்தித்த போது, தனக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, மொரானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்தார் மொரானி. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரண்
சினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது

சினிமா வாய்ப்பு – இளம்பெண்ணிடம் அத்து மீறிய தயாரிப்பாளர் கைது

பிற செய்திகள்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இளம்பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய கன்னட சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 2004ம் ஆண்டு வெளியான ‘ப்ரீதிமாயே ஹுஷாரூ’ என்ற கன்னட படத்தை தயாரித்தவர் விரேஷ். இவரிடம் ஒரு இளம்பெண் சினிமா வாய்ப்பு கேட்டுள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக விரேஷ் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், கடந்த புதன் கிழமை அந்த இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது விரேஷ் அங்கு சென்றுள்ளார். அவரிடம் சினிமா பற்றி பேச தொடங்கிய விரேஷ், மெல்ல மெல்ல அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியான அந்த பெண், அவரிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே ஓடி, கதவை மூடி தாழ்பாள் போட்டு விட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்த அப்பெண்ணின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் விரே