குறிச்சொல்: Audio release

வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு

வியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படம் வரும் 24ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் முதல் டீசர் வரை அனைத்து விஷயங்களும் வியாழக்கிழமைதான் நடந்துள்ளது. அஜித் மற்றும் சிவா இருவருமே சாய்பாபா பக்தர்கள் என்பதால் இந்த செண்டிமெண்ட் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 7ஆம் தேதி திங்கட்கிழமை வெளியாகிறது. இந்த படத்தின் அனைத்து விஷயங்களும் வியாழக்கிழமையே நடந்து கொண்டிருந்த நிலையில் இசை வெளியீடு மட்டும் திங்கட்கிழமை ஏன் வெளியாகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை இந்த நிலையில் நேற்று இரவு அதாவது வியாழக்கிழமை இந்த படத்தின் முன்னோட்ட பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களின் ஒருசில வரிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

“கடுகு” திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

Uncategorized
"கடுகு" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார். சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார். சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர். கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள்