குறிச்சொல்: Baahubali

அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

அமராவதியில் நானா? எஸ்.எஸ்.ராஜமௌலி விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகும் இரண்டு மாநிலத்திற்கும் ஐதராபாத் தலைநகராக இருந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த உரிமை இரண்டு மாநிலங்களுக்கும் உள்ளது. இந்நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அமராவதியை பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான மாதிரி வடிவங்கள் பல்வேறு நாட்டு நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில், கடைசியாக பிரிட்டிஷ் கட்டிடகலை நிறுவனமான நார்மன் பாஸ்டர் அண்ட் பார்ட்னர்ஸை ஆந்திர அரசு தேர்வு செய்துள்ளது. சட்டப்பேரவை அலுவலகம், உயர்நீதிமன்றம், அரசு வளாகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை உள்ளடக்கிய உலகத்தரமான வடிவமைப்பை சமீபத்தில் இந்நிறுவனம் ஆந்திர அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதன் இறுதி வடிவமைப்புக்கு ‘பாகுபலி’ இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நியமிக்கப்பட்டுள்ளதாக செ
பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்ட மகிழ்மதி அரண்மனை

சற்றுமுன், செய்திகள்
இந்திய திரையுலகில் தனி முத்திரை பதித்த படம் என்றால் அது ‘பாகுபலி’யைத்தான் சொல்ல வேண்டும். இரண்டு பாகங்களாக வெளிவந்த ‘பாகுபலி’ இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டாலும், சில பிரம்மாண்டமான அரங்குகளும் உருவாக்கப்பட்டன. மகிழ்மதி அரண்மனை, குந்தல தேசத்தின் அரண்மனை, மகிழ்மதியின் முன்னால் வானுயர்ந்த பல்லல தேவாவின் வெண்கல சிலை ஆகியவை கலை இயக்குனர்களால் உருவாக்கப்பட்டன. இதற்கு கலை இயக்குனர் சாபு சிரில் தலைமை தாங்கியிருந்தார். பலகோடி ரூபாய் செலவில் உருவான இந்த அரங்குகள் எல்லாம் படத்தில் பார்க்கும்போது அனைவருக்கும் வியப்பாய் இருந்தது. ‘பாகுபலி’ இரண்டு பாகம் மட்டுமே உருவாகும் என்று அதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனவே, இனிமேல் அங்கு எந்த படப்பிடிப்பும் நடத்தவேண்டிய சூழ்நிலை இல்லாததால்
பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

பாகுபலி ஹீரோவுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸை சந்தித்து ஒரு கதையை அவரிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை பிரபாஸுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபாஸ் இணையும் அந்த படம் பாகுபலிக்கு இணையாக பல மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறதா
இன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை

இன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை

சற்றுமுன், செய்திகள்
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இந்திய சினமாவை உலக அரங்கில் பேச வைத்து, இந்தயாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் வசூலில் சாதனைப் படைத்த படம் பாகுபலி 2 என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இந்தப் படத்தின் சாதனைகள் இதோடு முடியவில்லை. வெளியாகி 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை இந்தப் படம் பல வழிகளில் பல வசூல்களை ஈட்டி வருகிறது. இணையவழி வீடியோக்களைத் திரையிடும் உலகின் 9 ஆம் இடத்தில் உள்ள ‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம்சமீபத்தில் பாகுபலி படத்தை தனது பயன்பாட்டில் திரையிடுவதற்கான உரிமையை 25.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.  சமீப காலமாக தங்கல், பாகுபலி போன்ற இந்திய படங்கள் உலகத்திரையரங்குகளில் திரையிடப்படுவது மற்றும் மேற்கத்தியர்கள் நம் படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாலும்‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் இந்தியா திரைப்படங்கள் மீது முதலீடு செய்ய ஆர்
நான் இன்னொரு ‘பாகுபலி’க்குத் தயார்: பிரபாஸ்

நான் இன்னொரு ‘பாகுபலி’க்குத் தயார்: பிரபாஸ்

சற்றுமுன், செய்திகள்
உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கான ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தப் படம் பாகுபலி. இதன் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் பெரும் வெற்றி பெற்று புகழையும் வசூலையும் உலகளவில் அள்ளிக்குவித்தது. இது ஒரு பக்கம் இருக்க எஸ்.எஸ் ராஜமௌலியின் இந்த பிரம்மாண்ட படம் எடுத்து முடிக்க 4 ஆண்டுகள் ஆனது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் இப்படத்தின் மூலம் பெண்கள் மத்தியில் டார்லிங் என்றே கொண்டாடப்படுபவர், தற்போது பாலிவுட்டில் ரிலீசாகவுள்ள தனது ‘சாஹோ’ படத்திற்கான புரோமோஷ்னல் வேலைகளில் உள்ளார். “பாகுபலி” போன்ற பிரமாண்ட படங்களில் இனி நடிபீர்களா” என்று கேட்கப்பட்டதற்கு, “கதை சிறப்பானதாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால் அதே போன்று தொடர்ந்து 4 ஆண்டுகள் வேலை செய்வது கடினம் 2 ஆண்டுகள் என்றால் சரி” என்று கூறியுள்ளார்.
பாகுபலியாகிய நான்…பிரபாஸ் உருக்கமான பேச்சு..

பாகுபலியாகிய நான்…பிரபாஸ் உருக்கமான பேச்சு..

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி படத்தின் ஹீரோ பிரபாஸ் சினிமா ரசிகர்களுக்கும், அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான பாகுபலி2 சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை இப்படம் ரூ.1000 கோடியை வசூலித்திருப்பதாக தெரிகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தபடம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோ பிரபாஸ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: என் மீது இத்தனை அன்பு செலுத்தி வரும் என்னுடை ரசிகர்கள் அனைவரும் என்னுடைய நன்றி. பாகுபலி படத்தில் என்னால் முடிந்த வரை கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தற்போது என்னிடம் அன்பு காட்டி வருகிறார்கள். பாகுபலி படத்தில் நடித்தது
பிரபாஸும் ராணாவும் எனக்கு ஈடு கிடையாது – நடிகர் திமிர் பேச்சு

பிரபாஸும் ராணாவும் எனக்கு ஈடு கிடையாது – நடிகர் திமிர் பேச்சு

சற்றுமுன், செய்திகள்
எப்போதும் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துவரும் பாலிவுட் நடிகரும், சினிமா விமர்சகருமான கமால்கான் தற்போது பாகுபலி நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ரகுபதி ஆகியோர் பற்றி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமால்கன், சமீப காலமாக நடிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றி சர்ச்சையான கருத்துகளை பதிவு செய்து வருகிறர். சமீபத்தில் மோகன்லாலை பற்றி விமர்சித்து கேரள ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பின் அதற்கான மன்னிப்பு கேட்டார். அதன் பின் அவரின் பார்வை சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் பாகுபலி படம் மீது திரும்பியது. அது ஒரு குப்பைப் படம் என வெளிப்படையாக விமர்சித்தார். அந்நிலையில், அவரின் டிவிட்டர் கணக்கை பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணா ரகுபதி, அவரின் கணக்கிலிருந்து ப்ளாக் செய்தார். இதனால் கோபமடைந்த கமால் கான் “நான் இந்த முட்டாளை (ராணா) பின் தொடரவும் இல்லை, இ
பாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..

பாகுபலி கதையாசிரியரும் ராகவா லாரன்ஸும் இணையும் புதிய படம்..

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி படத்தின் கதையாசிரியர் அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுத இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பல வெற்றி படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குனர் ராஜமௌலியின் தந்தை அவர். ராஜமௌலி இயக்கிய 11 படங்களில் 9 படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் இவர்தான். மேலும், பாகுபலி முதல் மற்றும் இரண்டு பாகங்களுக்கும் இவர்தான் கதையாசிரியர். சமீபத்தில் வெளியான பாகுபலி2 மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்திய அளவில் அதிக வசூலை இந்த படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு விஜயேந்திர பிரசாத்தே கதையாசிரியர். அடுத்து, இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுதுகிறார். ராஜமௌலியின் உதவியாளர் மகாதேவ் இப்படத்தை இயக
பாகுபலி-2 ஏமாற்றிவிட்டது – மன்சூர் அலிகான் ஓபன் டாக்

பாகுபலி-2 ஏமாற்றிவிட்டது – மன்சூர் அலிகான் ஓபன் டாக்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி-2 படம் ஒருவகையில் தன்னை ஏமாற்றியுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசியதாவது: பாகுபலி படம் ஒரு சிறந்த சரித்திரப் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சத்யராஜும், ரம்யாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் என்னை அழ வைத்துவிட்டது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி மீது எனக்கு சில அதிருப்திகள் இருக்கிறது. அவர் நன்றாக தமிழ் பேசுகிறார். தமிழ்நாட்டில் பல நூறு கோடிகளை அப்படம் வசூலித்து வருகிறது. ஆனால், அப்படத்தில் இடம்பெற்றுள்ள
பாகுபலி2 ரிலீஸால் பரிதவிக்கும் புதிய தமிழ் படங்கள்…

பாகுபலி2 ரிலீஸால் பரிதவிக்கும் புதிய தமிழ் படங்கள்…

சற்றுமுன், செய்திகள்
ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி 2 படம் காரணமாக, புதிய தமிழ் படங்கள் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அதனால், அதன் இரண்டாம் பாகத்தின் மீது சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனவே, இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் சுமார் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள முக்கிய பல தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்பட்டது. நகரப்பகுதிகளிலும் இரண்டு அல்லது மூன்று தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகத்தை போலவே, இந்த படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. எனவே, படம் வெளியாகி 3 நாளில் இந்த பட