குறிச்சொல்: Ban

விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் விதித்த நிபந்தனை: அதிர்ச்சி தகவல்

விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் விதித்த நிபந்தனை: அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவினர்களுக்கு ஒரு கடுமையான நிபந்தனையை விதித்துள்ளாராம் கடந்த சிலநாட்களாக இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சண்டைக்காட்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, படக்குழுவினர் அனைவரும் செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவை ஏ.ஆர்.முருகதாஸ் விதித்துள்ளாராம் இந்த நிபந்தனை விஜய்க்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரே செல்போனை கொண்டு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிபந்தனைக்கு பின்னராவது லீக் நிறுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சன்னிலியோன் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாலியல் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்

சன்னிலியோன் புத்தாண்டு நிகழ்ச்சியில் பாலியல் பலாத்காரம்: அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
பிரபல ஆபாச மற்றும் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சன்னிலியோன் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறவில்லை என்பதால் இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க காவல்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக டிஜிபி கிரிஷ் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். இதன் காரணமாக சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது’’, என்றார். இதனால் சன்னி லியோன் கலந்து கொள்வதாக இரு
எனக்கு பணத்தை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்: சன்னிலியோன்

எனக்கு பணத்தை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்: சன்னிலியோன்

சற்றுமுன், செய்திகள்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வரும் புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்ததால் போலிசார் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததோடு, இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து சன்னிலியோன் தனது டுவிட்டரில் கூறியதாவது: என்னுடைய நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு கெட்டுபோய்விடும் என்றால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். அந்த நிகழ்ச்சியால் எனக்கு கிடைக்கும் பணத்தைவிட எனக்கு பொதுமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். வேறொரு நாளில் பெங்களூர் மக்களை சந்திக்கின்றேன், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
சன்னிலியோனுக்கு அரசு விதித்த திடீர் தடை

சன்னிலியோனுக்கு அரசு விதித்த திடீர் தடை

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி சன்னிலியோன் விரைவில் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கவுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார் இந்த நிலையில் வரும் புத்தாண்டில் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடனம் ஆட சன்னிலியோன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு கோடியில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சன்னிலியோன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுமா? அல்லது வேறு நடிகை ஒப்பந்தம் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
முத்துராமலிங்கம் படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி

முத்துராமலிங்கம் படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி

பிற செய்திகள்
நடிகர் கௌதம் கார்த்திக், நெப்போலியன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்து தமிழகத்தின் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் முத்துராமலிங்கம் படத்திற்கு தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முத்துராமலிங்கம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் என்பவர், யாகூ பைனான்ஸ் கன்சல்டண்ட் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் எம்.வி.பிரகாஷ் என்பவரிடம் ரூ.29 லட்சம் கடனாக வாங்கியதாகவும், அதை இதுவரை திருப்பவில்லை என்பதால், அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. எனவே அந்த தொகையை விஜய் பிரகாஷ் திருப்பி தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன்பின்னும், அந்த தொகை திருப்பித் தரப்படவில்லை. இதனால், முத்துராமலிங்கம் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என எம்.வி.பிரகாஷ் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, முத்