குறிச்சொல்: Bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘புலி’ பட வில்லன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘புலி’ பட வில்லன்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் டிவி வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது புதிய பங்கேற்பாளர்களும், வீட்டை விட்டு வெளியே போன பழைய பங்கேற்பாளர்களும் ரீஎண்ட்ரி ஆகி வரும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடவில்லை இந்த நிலையில் கன்னடத்தில் நான்கு பாகங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் கன்னடம் அடுத்த மாதம் முதல் ஐந்தாவது பாகம் வெளிவரவுள்ளது. இதை விஜய்யின் 'புலி' பட வில்லன் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் கன்னடம் முதலாவது மற்றும் நான்காவது பாகங்களை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

சற்றுமுன், செய்திகள்
சற்று முன் வெளியாகிய விஜய் டிவியின் புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரித்த முகத்துடன் ஜூலியும், ஆர்த்தியும் நுழைந்தாலும் பழைய பங்கேற்பாளர்கள் மீண்டும் நுழைவதை ஏற்கனவே இருப்பவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருவரையும் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றாலும் அவர்கள் மனதின் நெருடன் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதே நேரத்தில் ஜூலி, ஆர்த்தி வருகை பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஓவியா போல் நாடகமாடும் சுஜா, காயத்ரிக்கு மாற்றாக இருக்கும் காஜல் ஆகியோர்களுடன் ஜூலியும் இணைவதால் வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆட்டோ ராணி யார்?

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆட்டோ ராணி யார்?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் கவர்ச்சி நடிகை சுஜா வருணே மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் புதிய வரவாக இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு நடிகை பிக்பாஸ் பங்கேற்பாளராக இணைந்துள்ளார். காஜல் பசுபதி என்ற இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே ஆகவும், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்து இறங்கிய இவர், வீட்டில் நுழைந்தவுடன் சினேகனை கட்டிப்பிடித்து கொண்டார். மேலும் இவர் காயத்ரிக்கு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் காயத்ரிக்கு மிகக்குறைந்த அளவே வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் வெளியேறுவது உறுதி என தெரிகிறது.
பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிரிகர் சக்தி

பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட டிரிகர் சக்தி

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியும் சக்தியும் சேர்ந்து கொண்டு செய்த நாட்டாமைத்தனத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இருவரும் ஓவியாவை கார்னர் செய்து அவரது மனநிலை மாற்றத்திற்கும் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சக்திக்கு தற்போதுதான் தனக்கு எந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு உள்ளது என்பதை புரிந்துள்ளார். குறிப்பாக பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதையும் அவர் அறிந்துள்ளார். இந்த நிலையில் சக்தி தனது ஃபேஸ்புக்கில் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை செய்துள்ளார். பெண்களை தான் என்றும் மதிப்பவன் என்றும், பெண்களுக்கு எதிராக தான் என்றுமே பேசியதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஓவியா ஆர்மியினர் கடுமையான சொற்களை கொண்டு அவரை விமர
பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகை: இனிமேலாவது தேறுமா

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டிவியில் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியா இருந்தவரை நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஓவியாவை கார்னர் செய்து காய்த்ரி கோஷ்டியினர் வெளியேற்றிய பின்னர் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி ஆமையைவிட மெதுவானது. போரடிக்கும் டாஸ்க், பார்த்த முகத்தையே பார்ப்பது போன்றவற்றால் பார்வையாளர்கள் வெறுப்படைந்தனர். இந்த நிலையில் ஓவியா வெளியேறியவுடன் வேறு பிரபலங்களை பிக்பாஸ் வீட்டின் உள்ளே புகுத்த சேனல் நிர்வாகம் கடந்த சில நாட்களாக தீவிர முயற்சியில் இருந்தது. பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்று புதிய வரவாக நடிகை சுஜா வருணே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் பிக்பாஸ் வீட்டில் புதியதாக நுழைந்த பிந்துமாதவியால் நிகழ்ச்சியை சிறிது கூட சுவாரஸ்யமாக மாற்ற முடியவில்லை. அப்படி இருக்கும்போது சுஜா வருணே மட்டும் திருப்பத்தை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய நடிகை இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய நடிகை இவர்தான்

சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா வருவார் என்றும் அல்லது சீரியல் நடிகை ப்ரியா வருவார் என்றும் பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அவை உறுதி செய்யப்படவில்லை இந்த நிலையில் பிரபல குத்தாட்ட நடிகை சுஜயா நேற்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்துவிட்டதாகவும், அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த வார இறுதியில் மேலும் இருவர் பிக்பாஸ் வீட்டில் இணைவார்கள் என்றும், நிகழ்ச்சி இனி விறுவிறுப்புடன் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் காயத்ரி வெளியே செல்வது உறுதி என்பதால் இனி பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை அதிகம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா?

தினசரி பத்து லட்சம்: பேரம் பேசுகிறாரா ஓவியா?

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட ஓவியா, மீண்டும் திரும்பி வந்தால் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என்பது கடந்த வார டிஆர்பி நிரூபித்துள்ளது. ஓவியாவுக்கு மாற்றாக இருப்பார் என்று களமிறக்கப்பட்ட பிந்துமாதவி, பெரிதாக சோபிக்காதால் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நல்ல வேளையாக சனி, ஞாயிறு மட்டும் கமல்ஹாசன் காப்பாற்றுகிறார் இந்த நிலையில் ஓவியாவை மீண்டும் களமிறக்க அவரிடம் சேனல் நிர்வாகம் ஓவியாவிடம் பேரம் பேசி வருகிறதாம். இதுவரை தினமும் ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கி வந்த ஓவியா மீண்டும் உள்ளே சென்றால் தினம் ரூ.5 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கின்றதாம். இருப்பினும் ஓவியாவிடம் இருந்து பாசிட்டிவ் பதில் வராததால் ரூ.10 லட்சம் என்ற பேரமும் பேசப்பட்டு வருவதாக வதந்திகள் கூறுகின்றன. ஆனால் ஓவியாவின் தந்தை கறாராக பணத்தை விட தனது மகளின் மனநிம்மதியே பெரித
ஓவியாவுக்கு அறுவை சிகிச்சையா? அதிர்ச்சி தகவல்

ஓவியாவுக்கு அறுவை சிகிச்சையா? அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் புகழ் ஓவியா கடந்த வாரம் வெளியேறிய நிலையில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்கு காதுக்கு மேல் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஓவியாவின் மனநலம் பூரணமாக குணமடைய கப்பிங் தெரபி என்ற சிறிய வகை அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஓவியா இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இதன் காரணமாகவே ஓவியாவின் காதுக்கு மேல் உள்ள முடி அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓவியாவின் காதுக்கு மேல் உள்ள பகுதியை உற்று பார்த்தால் சிகப்பு நிறத்தில் ஒரு தழும்பு தென்படுவதை பார்க்கலாம். இதுதான் அந்த அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட தழும்பு என்றும் கூறப்படுகிறது.
பிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை

பிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை

சின்னத்திரை, செய்திகள்
ஓவியா இல்லாத பிக்பாஸ் கிட்டத்தட்ட இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓவியாவின் வெளியேற்றத்திற்கு ஒருவகையில் பிக்பாஸ் நிர்வாகத்தினர்களும் தான் காரணம். வேண்டுமென்றே ஓவியாவை கடுப்பேற்றும் வகையில் டாஸ்க் கொடுத்து வெறுப்பேற்றியது பிக்பாஸ்தான் இந்த நிலையில் தவறை உணர்ந்து எப்படியாவது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியாவை அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி வேறு வழியின்று வேறு பிரபலத்தை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் நடிகை ப்ரியா புதிய பிக்பாஸ் பங்கேற்பாளர் என்றும் அவர் வரும் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை?

ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை?

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா சென்ற பின்னர் அம்மா இல்லாத அதிமுக போன்றும், சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் போன்றும் களையிழந்து காணப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் செம அடி வாங்கியுள்ளது. யாரும் ஓட்டு போடுவதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. சுமார் 25% பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். இது இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த ஓவியா அல்லது வேறு பிரபல நடிகையை உள்ளே அனுப்பி வைக்க கட்டாயத்தில் நிர்வாகம் உள்ளது. ஓவியா மீண்டும் உள்ளே வர மறுத்துவிட்டதால் பல கோடிகள் கொடுத்து ஒரு பிரபல நடிகையை சம்மதிக்க வைத்துள்ளார்களாம். அவர் வரும் ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேலாவது இந்த நிகழ்ச்சி களைகட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்