செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17

குறிச்சொல்: Biopic

படமாகிறது மலலாவின் வாழ்க்கை சரிதை!

படமாகிறது மலலாவின் வாழ்க்கை சரிதை!

சற்றுமுன், செய்திகள்
குத்துச்சண்டை வீரர் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் வாழ்க்கை சரிதையாக 2014 மற்றும் 2016 இல் வெளிவந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றிப்பெற்றதை அடுத்து சுயசரிதைச் சார்ந்தப் படங்களின் மீது திரையுலக கவனம் திரும்பியுள்ளது. தனது சொந்த நாட்டில் தீவிரவாத கொலை தாக்குதல் உட்பட பல எதிர்ப்புகளை மீறி, பெண் கல்விக்காகவும் உலக சாமாதானத்திற்காகவும் இன்றுவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, பலரின் ஆச்சரிய பார்வைக்குச் சொந்தக்காரர்பாகிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளம் சமூக ஆர்வலர், மலலா யூசுப்சாய். இவரின் வாழக்கை சரிதைதான் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடுப்பு புஜ் மற்றும் மும்பையில் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் குமார் சமீபத்தில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்