குறிச்சொல்: birthday

ரஜினிகாந்த் பிறந்த நாளில் கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்

ரஜினிகாந்த் பிறந்த நாளில் கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்

சற்றுமுன், செய்திகள்
ஆர்யா நடிப்பில் 'ஹரஹர மகாதேவி இயக்குனர் சந்தோஷ் இயக்கவுள்ள கஜினிகாந்த் என்ற திரைப்படம் உருவாகவுள்ளது என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்தது இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் வரும் 11ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி ஆர்யாவின் பிறந்த நாள் என்பதும் மறுநாள் ரஜினிகாந்த் பிறந்த என்பதும் குறிப்பிடத்தக்க நிலையில் இருவருக்கும் பொதுவான நேரத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

சற்றுமுன், வீடியோ
பலூன் படத்திற்கான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா கலந்து கொண்டு அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளாா். அந்த நிகழ்ச்சியில் காதல் வசப்பட்டதால் அங்கிருந்து வெளியேறினாா். அங்கு அவா் பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தை ட்ரண்டாக மாறியது. அதை வைத்து பலூன் படத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. யுவன் இசையில் அனிருத் ஷட் அப் பண்ணுங்க பாடலை பாடியுள்ளாா்.  
காதலன் பிறந்த நாளை கொண்டாடிய நயன் – இடம் எது என தெரிகிறதா?

காதலன் பிறந்த நாளை கொண்டாடிய நயன் – இடம் எது என தெரிகிறதா?

சற்றுமுன், செய்திகள்
  நடிகை நயன்தாரா தன்னுடைய காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். பிரபுதேவை விட்டு பிரிந்த நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டார். அதன் பின் அவர்கள் இருவரும் காதலர்களாகவே வலம் வந்தனர். இந்நிலையில், விக்கேஷ் சிவனுக்கு இன்று பிறந்த நாள். இதை முன்னிட்டு காதலனுடன் அமெரிக்கா பறந்த நயன்தாரா, அங்கு அவரின் பிறந்த நாளை கொண்டாடினர். புகழ்பெற்ற புரோக்ளின் பாலத்தில் பாலத்தில் விக்னேஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். நன்றாக உற்றுப்பார்த்தால் அந்த இடம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நடிகர் சிம்பு, திரிஷாவை சில வருடங்களுக்கு பின்பு சந்திக்கும் இடம் அது என்பது நம்மில் பலருக்கும் நினைவில் வரும்...  
அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

சற்றுமுன், செய்திகள்
தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் ஜீவாவுடன் முதன் முதலில் அஞ்சலி அறிமுகமானார். பின் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் இயக்குநா் சுந்தா்.சியுடன் நடித்தாா். ஆனால் அங்காடி தெரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவா் நடிகை அஞ்சலி. தொடா்ந்து எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாா். ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாா். விரைவில் திருமணம் செய்து கொள்வாா் என்றும் கூறப்படுகிறது. தொடா்ந்து நடித்துக்கொண்டிருக்கும் போதே சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்தவா் விட்ட தனது மாா்கெட்டை பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினாா். என்னகாரணமோ தொியவில்லை பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு எதிா்பாா்த்த சினிமாபட வாய்ப்புகள் எட்டவில்லை. அவரது நிலைமை ஒரு குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு சென்றது தான் மிச்சம்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தரமணி படத்தில் தான் கொஞ்சம் வெளியே வந்துள்ளாா்.
அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

சற்றுமுன், செய்திகள்
அங்காடி தெரு மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடந்து எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கருங்காலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட மனகசப்பால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெய்யுடன் காதல் வயப்பட்டதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் அஞ்சலிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, எனக்கு அரசியல் பிடிக்கும். அதன் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன் என்றார். இதனால், விரைவில் ஒய்எஸ்ஆர் காங்.கட்சியில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸ் ஜூலியை மாறி மாறி கட்டிப்பிடித்த நடிகர்கள்

பிக்பாஸ் ஜூலியை மாறி மாறி கட்டிப்பிடித்த நடிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைநட்சத்திரங்கள் பலர் பீல்ட் அவுட் ஆனவர்கள் என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இன்றி சென்று கொண்டிருந்தது. இதில் ஒரே ஆறுதல் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியின் எண்ட்ரிதான். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாள் என்னை கட்டிப்பிடித்து வரவேற்க யாருமே இல்லை என்று ஆதங்கப்பட்ட ஜூலியை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அதில் கலந்து கொண்ட நடிகர்கள் உள்பட அனைத்து பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் அனைவரும் கட்டிப்பிடித்தனர் இன்று ஜூலிக்கு பிறந்த நாள் என்பதால் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஜூலியை எழுப்பி அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு அவரை கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் ஜூலி மிகவும் உணர்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீருடன் காணப்பட்டார்.
அஞ்சலிக்கு காதல் மழை பொழிந்த வெற்றி நடிகா்

அஞ்சலிக்கு காதல் மழை பொழிந்த வெற்றி நடிகா்

சற்றுமுன், செய்திகள்
அவருக்கு ஜெய் தனது ட்விட்டாில் வாழ்த்து மடலை ட்விட்டி உள்ளாா். அது என்வென்றால்,  நீ எனக்கு எவ்வளவு சிறப்போ அதை போலவே இன்று பிறந்த நாள் காணும் உனக்கு இந்த நாள் இனிய நாளாக சிறப்பாக அமையட்டும்! நீ ஒவ்வொரு நாளையும் நீயாக இருந்து சிறப்பாக்குகிறாய்... நானும் கடவுளும் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம் என தனது வாழ்த்து தொிவித்துள்ளாா். இப்படியாக தன் காதலை அன்பு மழையாக கெட்டி உள்ளாா். இதற்கு அஞ்சலி  ட்விட்டாில்  தனது நன்றியை தொிவித்துள்ளாா். நீ என்னோடு இருப்பதற்கு நன்றி... அது என்றென்றும் தொடர வேண்டும். இந்த நாளில் இப்படியான சிறப்பான வாழ்த்து கூறியதற்கு நன்றி என்று தொிவித்துள்ளாா். இவா்கள் ட்விட்டாில் தொிவித்து இந்த வாழ்த்து செய்தியை வைத்து நெட்டிசன்கள் இவா்கள் காதல் செய்வது கன்பாா்ம் தான் என்றும் அதனால் தான் இந்த கொஞ்சல்கள் என கலாய்த்து வருகின்றனா்.
விஜய் பிறந்த நாளில் மெல்போர்னில் சிறப்பு காட்சி: கெத்து காட்டும் ரசிகர்கள்

விஜய் பிறந்த நாளில் மெல்போர்னில் சிறப்பு காட்சி: கெத்து காட்டும் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது அவரது படத்திற்கு உலக அளவில் கிடைத்து வரும் வசூல் நிரூபித்து வரும் நிலையில் தற்போது வரும் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் சிறப்புக்காட்சி திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல நகரங்களிலும் கர்நாடகாவிலும் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் ஜூன் 22ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரிலும் ஒரு திரையரங்கில் 'துப்பாக்கி' திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளது. $10 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த காட்சிக்கு டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆஸ்திரேலியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் யார்?

அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் யார்?

சற்றுமுன், செய்திகள்
தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜீத்குமார் பிறந்தாள் இன்று. தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் இதனை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பல இடங்களில் ஏழை மக்களுக்கு உதவிகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ், நடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன் உள்ளிட்ட்ட பலரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாளுன்னு கூட பாக்காம போன் பண்ணி திட்ராங்கலாமா- சோகத்தில் கருணாஸ்

பிறந்த நாளுன்னு கூட பாக்காம போன் பண்ணி திட்ராங்கலாமா- சோகத்தில் கருணாஸ்

Uncategorized
பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். அதை தொடர்ந்து காதல் அழிவதில்லை, பாபா, வில்லன் என பல படங்களில் முன்னனி ஹீரோக்களுடன் காமெடியனாக நடித்து வந்தவர். பிறகு திண்டுகள் சாரதி, அம்பாமுத்திர அம்பானி படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர். இதன் பிறகு அரசியலில் வந்த இவர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலியில் செல்பி எடுத்து மாட்டிகொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கிழிகிழியன  கிழித்தனர். இதை தொடந்து தற்போது மக்கள் விரும்பாத கட்சியில் ஆதரவு தந்ததால் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். நேற்று இவரின் பிறந்த நாளன்று யாரும் போன் செய்து  வாழ்த்து தெரிவிக்காமல் போன் செய்து திட்டி இருக்கின்றன. இது கருணாஸை மிகவும் காயப்படுதியதாக பேசப்படுகிறது.