குறிச்சொல்: bjp

விஜய்க்கு அந்த பதவி நிச்சயம் கிடைக்கும்: கோவை சரளா

விஜய்க்கு அந்த பதவி நிச்சயம் கிடைக்கும்: கோவை சரளா

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் அவரை தேசிய நடிகராக மாற்றியது மட்டுமின்றி அவரை ஒரு அரசியல் தலைவராகவும் அவரது ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் ஆளும் அரசு கூட மத்திய அரசுக்கு அடிபணிந்து இருக்கும் நிலையில் விஜய்யின் மெர்சல் வசனங்கள் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அம்மாவாக 'மெர்சல்' படத்தில் நடித்த கோவை சரளா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'விஜய்யின் பொறுமைக்கும், நிதானத்திற்கும் அவருக்கு மிகப்பெரிய ஒரு அந்தஸ்தும், பதவியும் கிடைக்கும்' என்று கூறியுள்ளார். அவர் தமிழக முதல்வர் பதவியையே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் கோவை சரளா நடித்துள்ளார். அதற்கு பின்னர் விஜய்யுடன் தற்போதுதான் 'மெர்சல்' படத்தில் நடித்துள்ளதாகவும், விஜய் முன்பைவிட தற்போது அதிக மெச்சூரிட்டியுடன் இரு
மெர்சலும் அரசியலும்…

மெர்சலும் அரசியலும்…

சற்றுமுன், செய்திகள்
தீபாவளி அன்று இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த மெர்சல்  வெளியான நாள்முதல் பல அதிரடி விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளே இக்கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபில்ம்ஸிடம், சர்ச்சைக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்கும்படி பலமான கோரிக்கை எழுப்பியுள்ளனர். ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் #மெர்சல் டிரெண்டிங் தலைப்பாக மாறியுள்ளது. ஜி.எஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளையும் வசனங்களையும் நீக்கக் கோருவது ஜனநாயக ஆட்சிக்கு சரியானது அல்ல என்று பலர் இந்தப் படத்திற்கு ஆதரவளித்துள்ளப்பதோடு, பி.ஜே.பி அடக்குமு
பாஜகவுடனும் கூட்டணி சேர தயாா்:கமல்ஹாசன்

பாஜகவுடனும் கூட்டணி சேர தயாா்:கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
கமல் அரசியல் பற்றி அவ்வப்போது தனது கருத்தை தொிவித்து வருகிறாா். நேரடியாகவும், ட்விட்டா் வலைத்தளத்தின் வாயிலாகவும் மாநில அரசின் எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறாா். நாட்டில் ஊழல் மலிந்த விட்டதாகவும் அதை அகற்ற அரசியலுக்கு வருகிறேன் என்று கமல் கூறினாா். விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், கட்சியின் சின்னம், கட்சியின் பெயா், கொடி உருவாக்கும் பணியை தொடங்கி விட்டேன் என்று நடிகா் கமல் தொிவித்து உள்ளாா். இந்நிலையில் பத்திாிக்கையாளா்களுக்கு அளித்த பேட்டியில் கமல் சொன்னது எனது அவா்களின் கொள்கைகளில் ஈடுபாடு கிடையாது. அரசியலில் தீண்டாமை என்று எதுவும் கிடையாது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்து என் மக்களுக்கு நல்லது என்றால் நிா்வாக ரீதியாக தேவைப்பட்டால் இணைந்து செல்வேன். தோ்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று
பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவேக் சந்திப்பு. பாஜகவில் சேருகிறாரா?

பொன்.ராதாகிருஷ்ணனுடன் விவேக் சந்திப்பு. பாஜகவில் சேருகிறாரா?

சற்றுமுன், செய்திகள்
ஜெயலலிதா மரணம், கருணாநிதியின் உடல்நலம், அதிமுகவின் பிளவு ஆகியவை காரணமாக தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்றும் அதற்கு இதுவே சரியான தருணம் என்றும் கருதி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது பாஜக முதல்கட்டமாக கட்சியை பிரபலப்படுத்த திரைத்துறையினர்களை கட்சியின் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பயனாக கங்கை அமரன், எஸ்.வி.சேகர், காய்த்ரி ரகுராமன் உள்பட பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் இன்னும் சில திரையுலகினர்களுக்கு பாஜக வலைவிரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் விவேக் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விவேக் பாஜகவில் சேருவாரா? என்று கூறப்படும் நிலையில் இதுகுறித்து விவேக் தரப்பினர் கூறியபோது, 'மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண
ரஜினியை மிரட்ட ப.சிதம்பரம் வீட்டில் சோதனையா? கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்

ரஜினியை மிரட்ட ப.சிதம்பரம் வீட்டில் சோதனையா? கராத்தே தியாகராஜன் பரபரப்பு தகவல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு விரைவில் வர வாய்ப்புள்ளதாக அவரது நேற்றைய பேச்சில் இருந்து தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அவரை தங்கள் பக்கம் இழுக்க கடந்த பல வருடங்களாக பாஜக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரஜினி அரசியல் குறித்து பேசிய 24 மணி நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு வந்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் வேறு விதமாக பார்க்கின்றனர். ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் அவருக்கும் இதே கதிதான் என அவரை பயமுறுத்துவதற்காகவே இந்த ரெய்டு என்றும் மறைமுகமாக ரஜினியை பயமுறுத்தவே இந்த நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியபோது, 'அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை இது. இத்தனை ஆண்டுகள் கழித்து சோதனை நடைபெறுவதற்கு காரணம் என்ன?.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் நாயகியும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை நக்மா, நேற்று மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, 'ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியவர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இந்த சந்திப்பில் அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது நான் உள்பட பொதுமக்களின் அனைவரும் விரும்புகிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சாதிப்பார். ஆனால் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம்' என்று கூறினார் ஏற்கனவே பாஜகவினர் 'குடியரசு தலைவர் பதவி உள்பட பல ஆசைகளை காட்டி ரஜினியை அரசியலுக்கு இழுக்க மு
கமல்ஹாசன், சத்யராஜூக்கு பணம் தான் முக்கியம். எச்.ராஜா

கமல்ஹாசன், சத்யராஜூக்கு பணம் தான் முக்கியம். எச்.ராஜா

சற்றுமுன்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் கமல், சத்யராஜ் ஆகியோர்களுக்கு பணம் தான் முக்கியம். தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு இரண்டாம் பட்சம்தான் என்று கூறியுள்ளார். 'சத்யராஜ் கமல்ஹாசனின் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது. இருவரும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுகின்றனர்' என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது கூறினார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்துள்ளனர். எச்.ராஜா குறித்த மிமிக்களும் ஏராளமாக டுவிட்டரில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.