குறிச்சொல்: Bose Venkat

தலைமுடிக்காக கணவரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த சோனியா போஸ் வெங்கட்

தலைமுடிக்காக கணவரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த சோனியா போஸ் வெங்கட்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் போஸ் வெங்கட் - சோனியா. தற்போது போஸ் வெங்கட் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் சமயத்தில், சோனியா தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக போஸ் வெங்கட்டை மிரட்டியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சோனியாவும், நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எனது கணவரிடம் மிரட்டியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த மிரட்டல் நடந்தது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தபோது போஸ் வெங்கட்டுக்கு ஒரு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்திற்காக தனது தலைமுடி ஸ்டைல் எல்லாம் மாற்றிக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், போஸ் வெங்கட்டுக்கு ஒரு சீரியலிலும் நடிக்க வா