குறிச்சொல்: Box office

துப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

துப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

சற்றுமுன், செய்திகள்
மிஷ்கினின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்டிரியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து சமீபத்தில் வெளியான படம் துப்பறிவாளன். ஒரு துப்பறியும் நிபுணராக விஷால் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்குவோம் என விஷால் கூறியுள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியான கடந்த 4 நாட்களில், சென்னையில் இப்படம் ரூ. 1.67 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியான வியாழக்கிழமை அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், வெள்ளிக்கிழமை முதல் வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அளித்திருப்பதால், நிறைய குழந்தைகள் இப்படத்தை பார்க்க விரும்புகின்றனர் எனவும், முக்கியமாக ஏ செண்டர் எனப்படும் நகரப் பகுதிகளில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, நாட்கள் செல்ல செல
சென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்

சென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்

சற்றுமுன், செய்திகள்
இதுவரை இல்லாத அளவில் விவேகம் படத்திற்கு மிக அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. அஜித்தை பிடிக்காத ஊடகங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் இந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி 'விவேகம்' படத்தின் வசூல் புதிய சாதனை செய்துள்ளது. இந்த படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கியுள்ளது. அதாவது ரூ.5,67,32,498 வசூல் செய்துள்ளது. மேலும் திரையிடப்பட்ட 889 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்து இந்த படத்தின் வெற்றி உறுதிசெய்யப்படும் என விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
படமாகிறது மலலாவின் வாழ்க்கை சரிதை!

படமாகிறது மலலாவின் வாழ்க்கை சரிதை!

சற்றுமுன், செய்திகள்
குத்துச்சண்டை வீரர் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரின் வாழ்க்கை சரிதையாக 2014 மற்றும் 2016 இல் வெளிவந்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வெற்றிப்பெற்றதை அடுத்து சுயசரிதைச் சார்ந்தப் படங்களின் மீது திரையுலக கவனம் திரும்பியுள்ளது. தனது சொந்த நாட்டில் தீவிரவாத கொலை தாக்குதல் உட்பட பல எதிர்ப்புகளை மீறி, பெண் கல்விக்காகவும் உலக சாமாதானத்திற்காகவும் இன்றுவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, பலரின் ஆச்சரிய பார்வைக்குச் சொந்தக்காரர்பாகிஸ்தானைச் சேர்ந்த 20 வயது இளம் சமூக ஆர்வலர், மலலா யூசுப்சாய். இவரின் வாழக்கை சரிதைதான் பாலிவுட்டில் தயாராகி வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடுப்பு புஜ் மற்றும் மும்பையில் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதன் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு வரும் செப்டெம்பர் மாதம் தொடங்கும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் குமார் சமீபத்தில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்
பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படம் வசூலில் இந்திய அளவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி2. இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் 3 நாளில் ரூ.400 கோடியை தாண்டியது. தற்போது 5 நாளில் ரூ.700 கோடியை தாண்டி இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான எந்த படமும், இவ்வளவு வேகமாக இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லை. இதற்கு முன் அமீர்கான் நடித்த பிகே படத்தின் மொத்த வசூல் ரூ.792 கோடி என்பதுதான் சாதனையாக இருந்தது. ஆனால், பாகுபலி படம் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய சினிமாவில் அதிக வசூல் ஆன படம் என்ற பெருமையை பாகுபலி2 படம் தட்டிச்செல்லும் என்பதில் ஐயமில்லை...