குறிச்சொல்: bulgaria

5 டிகிரி குளிரில் வெற்றுடம்புடன் அஜித்: விவேக் ஓபராய் ஆச்சரியம்

5 டிகிரி குளிரில் வெற்றுடம்புடன் அஜித்: விவேக் ஓபராய் ஆச்சரியம்

சற்றுமுன், செய்திகள்
அஜித் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் மிகுந்த சிரத்தை எடுத்து நடிப்பவர் என்பதும் பல காட்சிகளுக்கு டூப் போடாமல் நடிப்பவர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 'விவேகம்' படத்தின் வில்லன் நடிகர் விவேக் ஓபராய், 'பல்கேரியாவில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கும். ஒருநாள் மைனஸ் 5 டிகிரி இருக்கும்போது படப்பிடிப்பு நடந்தது. அப்போது இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்பட அனைவரும் பல சட்டைகள் போட்டும் குளிரில் நடுங்கி கொண்டிருந்தோம். ஆனால் அஜித், அன்றைய படப்பிடிப்பில் சட்டையே போடாமல் வெற்றுடம்புடன் சில காட்சிகளில் நடித்தார். அதை பார்த்தவுடன் எனக்கு புல்லரித்துவிட்டது. இப்படி ஒரு தொழில்பக்தியுடன் கூடிய நடிகரா? என்று வியந்தேன்' என்று கூறினார்.
அஜித் சென்னை திரும்பும் நாள் இதுதான்!

அஜித் சென்னை திரும்பும் நாள் இதுதான்!

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் தற்போது பல்கேரியாவில் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பில் விறுவிறுப்புடன் உள்ளார். அவர் பிறந்த நாளான மே 1ஆம் தேதி கூட அவர் தனது குடும்பத்தினர்களுடன் இருக்க முடியாத அளவுக்கு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளதாகவும் முழு படப்பிடிப்பும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும், வரும் 12 அல்லது 13ஆம் தேதி விமானத்தின் டிக்கெட் கிடைப்பதை பொறுத்து அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் 'விவேகம்' படத்தின் டீசர் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அஜித் மற்றும் இயக்குனர் சிவா சென்னை திரும்பியுடன் அவர்கள் அனுமதியுடன் இம்மாத இறுதியில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனமான சத்