குறிச்சொல்: Cancel

பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்

பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்

சற்றுமுன், செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த நிலையில் பத்திரிகையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை இனிமேல் எந்த படங்களின் பிரஸ்மீட், பிரஸ் காட்சிகள் மற்றும் சினிமா விழாக்கள் என்பது இல்லை என்பதுதான் அந்த அறிவிப்பு இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், இன்று திட்டமிட்டுள்ள அனைத்து சினிமா விழாக்களும் ரத்து செய்யப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

தனுஷ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்ச்சி

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடித்த 'விஐபி 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் சென்னை மட்டுமின்றி பல நகரங்களில் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது திடீரென அதிகாலை 5 மணி காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து ரோஹினி திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தனுஷின் 'விஐபி 2' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் வெளிவர வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புவதால் அவருடைய விருப்பத்தை ஏற்று காலை 5 மணி காட்சி ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. எனவே இந்த படத்தின் முதல் காட்சி நாளை காலை 8 மணிக்கே தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடைபெறவிருந்த இடைத் தேர்தலை தேர்தல் கமிஷன் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது. ஜெ.வின் மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருந்தது. அதிமுக அணி இரண்டாக பிரிந்து தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின் கம்பம் சின்னத்தில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது காணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் மற்றும் பலரும் போட்டியிட்டனர். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நிலையில், அந்த தொகுதியில் தினகரன் அணியினர் ஒட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகிறது. சமீபத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போக, தினகரன் அணியினர் பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட திமுகவை சேர்ந்த சிலருக