செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

குறிச்சொல்: censor

விவேகம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ். படக்குழுவினர் மகிழ்ச்சி

விவேகம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ். படக்குழுவினர் மகிழ்ச்சி

சற்றுமுன், செய்திகள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் மற்றும் பலர் நடித்த 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்தனர். படத்தை சற்றுமுன் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள் எந்த கட் இல்லாமல் படத்தை அனுமதித்ததோடு, படத்திற்கு 'U' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 2500 திரையரங்குகளில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது., மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு காட்சியும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலை காட்சியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஆண் சரக்கடித்தால் ‘யூ’, பெண் சரக்கடித்தால் ‘ஏ’

ஆண் சரக்கடித்தால் ‘யூ’, பெண் சரக்கடித்தால் ‘ஏ’

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 'தங்க மீன்கள்' என்ற திரைப்படம் வெளிவந்தது. அதன் பின்னர் 4 வருடங்கள் கழித்து அவர் இயக்கிய அடுத்த படமான 'தரமணி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஒரு பெண் ராவ் ஆக சரக்கு அடிப்பது போன்ற காட்சி உள்ளதால் 'ஏ' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது நடிகர்கள் சரக்கு அடிக்கும் காட்சிகள் உள்ள பல திரைப்படங்களுக்கு 'யூ' மற்றும் 'யூஏ' சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகைகள் சரக்கு அடித்தால் மட்டும் 'ஏ' சான்றிதழா? என்று இயக்குனர் ராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதார் அட்டையாலும் தமிழ் சினிமாவுக்கு சிக்கல்

ஆதார் அட்டையாலும் தமிழ் சினிமாவுக்கு சிக்கல்

சற்றுமுன், செய்திகள்
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, ஆன்லைன் பைரசி, திருட்டு விசிடி என தமிழ் சினிமா நொந்து நூலாகி இருக்கும் நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகளும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை அலைச்சலை கொடுக்கின்றார்களாம் தற்போது ஒருதிரைப்படம் சென்சாருக்கு செல்ல வேண்டும் என்றால் ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தயாரிப்பாளரின் ஆதார் அட்டையையும் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை தயாரிப்பாளருக்கு இல்லை என்றால் படம் சென்சார் செய்யப்படாது. இந்த நிலையில் சில சமயம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்திற்கு தயாரிப்பாளருக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம் சென்சார் அதிகாரிகள். இதனால் தயாரிப்பாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.