குறிச்சொல்: Chandini upcomin g movie

எழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் !!

எழுத்தாளராக நடிக்கும் சாந்தினி தமிழரசன் !!

சற்றுமுன், செய்திகள்
பாக்யராஜ் இயக்கத்தில்  சாந்தனுக்கு ஜோடியாக சித்து +12 படம் மூலம் அறிமுகமாகி பின் நகுலுடன் நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு மற்றும் சில படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன். தற்போது பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். ‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் சாந்தினி ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்த கதாப்பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் 'ராஜா ரங்குஸ்கி’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.