குறிச்சொல்: Chennai

2வது வாரத்தில் சரிந்த பொங்கல் படங்களின் வசூல்

2வது வாரத்தில் சரிந்த பொங்கல் படங்களின் வசூல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் 'குலேபகாவலி மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பொங்கலின்போது கிடைத்த நீண்ட விடுமுறை காரணமாக முதல் வாரத்தில் நல்ல வசூலை அள்ளின. ஆனால் இரண்டாவது வாரத்தில் மூன்று படங்களின் வசூலும் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இரண்டாவது வாரத்தில் சென்னையில் தானா சேர்ந்த கூட்டம் ரூ. 6.33 கோடியும், ஸ்கெட்ச் ரூ. 3.53 கோடியும், குலேபகாவலி ரூ. 1.14 கோடியும் வசூல் செய்துள்ள்ன. மேலும் வரும் 26ஆம் தேதி புதிய படங்கள் சில வெளியாகவுள்ளதால் பல திரையரங்குகளில் இருந்து இந்த மூன்று படங்களும் தூக்கப்படும் நிலையில் உள்ளன.
சென்னையில் டேரா போட சன்னிலியோன் முடிவு? அதிர்ச்சியில் நடிகைகள்

சென்னையில் டேரா போட சன்னிலியோன் முடிவு? அதிர்ச்சியில் நடிகைகள்

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தமிழில் உருவாகும் சரித்திர படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அல்லவா. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விரைவில் அவர் சென்னைக்கு வரவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடைபெறவிருப்பதால் சென்னையில் வீடு அமர்த்தி சில மாதங்கள் குடியிருக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இது இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மட்டுமின்றி சென்னையில் இருந்தால் வேறு சில வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது சன்னிலியோன் கணிப்பு. இதனால் தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் கலக்கம் அடைந்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது சன்னிலியோன் சென்னைக்கு குடிவந்தால் ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் அவரது வீட்டை நோக்கி படையெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்

இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்

சற்றுமுன், தமிழகம்
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்து வரும் ஆர்.கே.நகர் திரைப்படத்தின்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்' ஆனால் தேர்தலுக்கு இன்னும் பத்து தினக்கள் மட்டுமே இருப்பதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒருவேளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்த்னர். வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும்,  விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் க
வாழ்வைத் திருப்பிய நொடிகள்; விபத்துக்கு பின் கவுதம் மேனனின் டுவீட்

வாழ்வைத் திருப்பிய நொடிகள்; விபத்துக்கு பின் கவுதம் மேனனின் டுவீட்

சற்றுமுன், செய்திகள்
இன்று காலை சென்னை அருகே பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சென்ற கார் டிம்பர் லாரி ஒன்றின்மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் கவுதம் மேனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுதம் மேனன் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து ஒரு டுவீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது: என் நலன் விரும்பிய , நலம்பெற வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. வாழ்வைத் திருப்பிய நொடிகள் அவை. இப்போது நலமாக இருக்கிறேன். எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் செய்த உதவியால் மனிதாபிமானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டேன். மீண்டும் படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கிறேன். https://twitter.com/menongautham/status/938815017658355716
சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’

சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூலை அள்ளிய ‘அறம்’

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகில் ஓப்பனிங் வசூலாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் ஆவது பெரிய ஸ்டார்களின் படங்களாக மட்டுமே இருந்துள்ளது. இதுவரை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த படமும் ஒரு கோடி ரூபாய் ஓப்பனிங் வசூல் பெற்றிராத நிலையில் முதல் முறையாக சென்னையில் நயன்தாராவின் 'அறம்' திரைப்படம் ரூ.1 கோடிக்கும் மேல் ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,02,81,259 வசூல் செய்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் இதே தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நயன்தாரா நடிப்பில் 'அறம் 2' படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

துப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

சற்றுமுன், செய்திகள்
மிஷ்கினின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்டிரியா, சிம்ரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து சமீபத்தில் வெளியான படம் துப்பறிவாளன். ஒரு துப்பறியும் நிபுணராக விஷால் நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் துப்பறிவாளன் படத்தின் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்குவோம் என விஷால் கூறியுள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியான கடந்த 4 நாட்களில், சென்னையில் இப்படம் ரூ. 1.67 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியான வியாழக்கிழமை அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், வெள்ளிக்கிழமை முதல் வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அளித்திருப்பதால், நிறைய குழந்தைகள் இப்படத்தை பார்க்க விரும்புகின்றனர் எனவும், முக்கியமாக ஏ செண்டர் எனப்படும் நகரப் பகுதிகளில் இப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, நாட்கள் செல்ல செல
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
சென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்

சென்னையில் 4 நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிய ‘விவேகம்

சற்றுமுன், செய்திகள்
இதுவரை இல்லாத அளவில் விவேகம் படத்திற்கு மிக அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. அஜித்தை பிடிக்காத ஊடகங்கள், விமர்சகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் இந்த படத்தை நெகட்டிவ் விமர்சனம் செய்ய பல லட்சங்கள் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி 'விவேகம்' படத்தின் வசூல் புதிய சாதனை செய்துள்ளது. இந்த படம் சென்னையில் மட்டும் 4 நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கியுள்ளது. அதாவது ரூ.5,67,32,498 வசூல் செய்துள்ளது. மேலும் திரையிடப்பட்ட 889 காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்து இந்த படத்தின் வெற்றி உறுதிசெய்யப்படும் என விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜீத் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி – இயக்குனர் சிவா டிவிட்

அஜீத் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி – இயக்குனர் சிவா டிவிட்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் அஜீத் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சியாக சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு புகைப்படக் கலைஞர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். சினிமா படப்பிடிப்பிறக எந்த ஊருக்கு மற்றும் நாட்டிற்கு சென்றாலும் தன்னுடன் ஒரு கேமராவை எடுத்துக்கொண்டுதான் அவர் செல்வார். அங்கு அவருக்கு பிடித்த இடங்களை அவர் கேமராவில் புகைப்படம் எடுப்பார். அப்படி அவர் அடுத்த புகைப்படங்களின் தொகுப்பை சென்னை, டிடிகே சாலையில் உள்ள ஃபோக்கஸ் ஆர்ட் கேலரி என்ற ஐடத்தில் மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர். விவேகம் படத்தின் இயக்குனர் சிவா இன்று அங்கு சென்று அந்த புகைப்படங்களை பார்வையிட்டார். அதன் பின், அதுபற்றி  தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “அஜீத் சார் ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞராக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அனைத்து அஜீத
நள்ளிரவில் சென்னை திரும்பிய ரஜினி!

நள்ளிரவில் சென்னை திரும்பிய ரஜினி!

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த், நேற்று துபாய் வழியாக சென்னை வந்தடைந்தார். அவருடன் அவருடைய மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் வந்தார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்னும் ஒரிரு நாட்களில் 'காலா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ள ரஜினிகாந்த், இந்த சந்திப்பின்போது அரசியலில் குதிப்பது எப்போது என்பது உள்பட பல முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.