குறிச்சொல்: chermi

திாிஷா ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியது என்ன?

திாிஷா ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியது என்ன?

சற்றுமுன், செய்திகள்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அவா் சமீபத்தில் ரசிகா்களை சந்தித்து வந்தாா். அவா் விரைவில் அதுகுறித்து அறிவிப்பாா் என்று அவரது அண்ணன் தொிவித்திருந்தாா். அனேகமாக ஜூலை மாதம் தனது புது கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு நடிகா், நடிகைள் தங்களது கருத்துகளையும், அதற்கான ஆதரவையும் தொிவித்து வந்தாா்கள். எனவே திரையுலகினா் ரஜினிக்கு பெரும் ஆதரவை தருவாா்கள் என்று நம்பப்படுகிறது. திரையுலக பிரபலங்கள் சூப்பா் ஸ்டாருக்கு ஆதரவாக கருத்து தொிவித்து வரும் நிலையில், முன்னணி நடிகை திாிஷாவிடம்  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து அவா் பேசியதாவது, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று தொிவித்து ஒதுங்கி கொண்டாா்.