குறிச்சொல்: Chief minister

சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல்வர் கொடுத்த திடீர் சலுகை

சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல்வர் கொடுத்த திடீர் சலுகை

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்த Agnyaathavaasi என்ற படம் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஆந்திர அரசு சிறப்பு அனுமதி ஒன்றை அளித்துள்ளது. அதாவது இந்த படத்தை திரையரங்குகளில் இடைவெளியின்றி 24 மணி நேரமும் திரையிட்டு கொள்ளலாம் என்ற அனுமதியை அரசு அளித்துள்ளது. எனவே ஆந்திர திரையரங்குகளில் இந்த படம் நாள் ஒன்றுக்கு 8 காட்சிகள் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே இதுவரை இப்படி ஒரு அனுமதி எந்த ஒரு நடிகரின் திரைப்படத்திற்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி என்பதும் அனிருத் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது
சிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை: முதல்வருக்கு திரையுலகினர் கோரிக்கை

சிவாஜிக்கு சென்னை மெரீனாவில் மீண்டும் சிலை: முதல்வருக்கு திரையுலகினர் கோரிக்கை

சற்றுமுன், செய்திகள்
திமுக ஆட்சியில் சென்னை மெரீனாவில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மிகப்பெரிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. ஆனால், அந்த சிலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும் அந்த சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த சிலையை அகற்றிவிட்டனர். இந்நிலையில், அகற்றப்பட்ட சிவாஜிகணேசன் சிலையை சென்னை கடற்கரை சாலையிலேயே நிறுவவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு திரைத்துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பெப்சி யூனியன் நிர்வாகிகள் இணைந்து கலந்துகொண்ட கூட்டத்தில் முதலமைச்சருக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்தது தமிழர்களாகிய நாம் பெற்ற பேறு. இந்திய சினிம