குறிச்சொல்: Cinema

சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதானா? கமல் விளக்கம்

சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதானா? கமல் விளக்கம்

சற்றுமுன், தமிழகம்
நடிகர் கமல்ஹாசன் இம்மாதம் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளிவந்தது இந்திய சினிமாவில் கமல்ஹாசன் இல்லாததை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என வெளியான தகவலுக்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு படங்களுக்கும் பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது
சினிமாவில் நடிக்க வருகிறேனா? சத்யராஜ் மகள் விளக்கம்

சினிமாவில் நடிக்க வருகிறேனா? சத்யராஜ் மகள் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜை தொடர்ந்து சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை' இவ்வாறு குறி
இந்த வாரம் ஒன்று… இரண்டல்ல… 11 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் ஒன்று… இரண்டல்ல… 11 படங்கள் ரிலீஸ்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. வாரம் ஒன்றுக்கு 4 படங்களுக்கும் குறைவில்லாமல் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவும், அத்தி பூத்தாற்போல்தான் நடக்கிறது. இப்படியிருக்கையில் இந்த வாரம் நாளை ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 13 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. அவை, ஆயிரத்தில் இருவர், நெறி, தெரு நாய்கள், பிச்சுவாகத்தி, கொஞ்சம் கொஞ்சம், வல்லதேசம், களவு தொழிற்சாலை, காக்கா, பயமா இருக்கு, நான் ஆணையிட்டால், திட்டி வாசல் ஆகிய 11 நேரடி தமிழ் படங்களும், போலீஸ் ராஜ்ஜியம், கிங்ஸ் மேன் ஆகிய டப்பிங் மொழி திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இவைகளில் ஆயிரத்தில் இருவர், நான் ஆணையிட்டால் ஆகிய இரு படங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிய படங்கள். மற்றபடி, அனைத்தும் ச
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
இதற்கு அந்த நடிகர் காரணமில்லை- பதறிய இளம் நடிகை

இதற்கு அந்த நடிகர் காரணமில்லை- பதறிய இளம் நடிகை

சற்றுமுன், செய்திகள்
மலையாள நடிகையை கடத்தல் சம்பந்தமான வழக்கில் நடிகா் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி நமக்கு தொிந்ததே. இவா் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.  மலையாள சினிமாத்துறையை சோ்ந்த நடிகா், நடிகைகளின் படவாய்ப்புகளை நடிகா் திலீப் கெடுத்து வந்துள்ளதாக புகாா் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா துறையில் தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் நடிகா் திலீப் இல்லை என்று நடிகை பாமா கூறியுள்ளாா். கேரளாவைச் சோ்ந்த இவா் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போவதற்கு சினிமாத் துறையைச் சோந்த ஒருவா் தான் காரணம் என்று கூறியிருந்தாா். அப்போது மலையாள நடிகா் யாா் என்ற பெயரை சொல்லாமல்  அந்த பேட்டியில் கூறியிருந்தாா். இதை கேட்ட அனைவரும் அவா் நடிகா் திலீப் பற்றி தான் கூறியிருப்பதாக பேச தொடங்கிவிட்டனா். இதைப் பாா்த்து அதிா்ச்சிக்குள்ளான ந
சினிமாவை விட்டு விலக போகிறேன்: கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

சினிமாவை விட்டு விலக போகிறேன்: கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

சற்றுமுன், பிற செய்திகள்
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரைத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஜி.எஸ்.டி வரி 28% என்பதை இறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் 30% கேளிக்கை வரி இருந்தாலும் தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஜூலை 1 முதல் வரிவிலக்கு என்பது கிடையாது. 28% வரி கட்டியே ஆகவேண்டும். இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜிஎஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து  தென்னிந்திய வர்த்தக சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இன்று நடந்த இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், 'சினிமா என்பது கலை, அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம். ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இண
ரூ.1000 கோடி செலவில் உருவாகும் மகாபாரதம்…

ரூ.1000 கோடி செலவில் உருவாகும் மகாபாரதம்…

சற்றுமுன், செய்திகள்
இந்திய இதிகாசங்களில் முக்கிய ஒன்றான மகாபாரதம் சினிமாவாக எடுக்கப்படவுள்ளது. மகாபாரதக் கதைகள் தொலைக்காட்சிகளில் பலமுறை தொடர்களாக எடுக்கப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது. ஆனால், அதிக பட்ஜெட் காரணமாக அந்த கதையை யாரும் சினிமாவாக எடுக்கவில்லை. பாகுபலியை எடுத்த இயக்குனர் ராஜமௌலி, மகாபாரத கதையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது தற்போது இல்லை என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், மலையாள பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், மகாபாரதத்தை சினிமாவாக எடுக்க முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதில் நடிகர் மோகன்லால் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. மேலும்,