ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

குறிச்சொல்: citizen

‘தல’ தலையாட்டினா போதும் ‘சிட்டிசன் 2’ ரெடி: சரவணன் சுப்பையா

‘தல’ தலையாட்டினா போதும் ‘சிட்டிசன் 2’ ரெடி: சரவணன் சுப்பையா

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சரவணன் சுப்பையா இயக்கிய 'சிட்டிசன்' திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. ரூ.8 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இருமடங்கு வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாக கதை தன்னிடம் தயாராக இருப்பதாகவும், தல அஜித் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பை தொடங்க தயாராக இருப்பதாகவும் இயக்குனர் சரவணன் சுப்பையா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அஜித்தின் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படம் எது என்பது உறுதி செய்யாத நிலையில் 'சிட்டிசன் 2' படத்திற்கு அஜித் சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்