குறிச்சொல்: controversy

கமல்ஹாசன், சத்யராஜூக்கு பணம் தான் முக்கியம். எச்.ராஜா

கமல்ஹாசன், சத்யராஜூக்கு பணம் தான் முக்கியம். எச்.ராஜா

சற்றுமுன்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய எச்.ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர் கமல், சத்யராஜ் ஆகியோர்களுக்கு பணம் தான் முக்கியம். தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு இரண்டாம் பட்சம்தான் என்று கூறியுள்ளார். 'சத்யராஜ் கமல்ஹாசனின் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது. இருவரும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுகின்றனர்' என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது கூறினார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்துள்ளனர். எச்.ராஜா குறித்த மிமிக்களும் ஏராளமாக டுவிட்டரில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.