செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 12

குறிச்சொல்: court

ஜோதிகா மீது மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு

ஜோதிகா மீது மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய ஒரு கெட்ட வார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஒரே ஒரு வார்த்தையால் அவர் கோர்ட் படியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆம், 'நாச்சியார்' படத்தில் அவர் பேசிய அந்த கெட்ட வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிகா மற்றும் பாலாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு அனேகமாக வரும் திங்களன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவின் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த ஒரே ஒரு வார்த்தை படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்ட காஜல் அகர்வாலுக்கு கோர்ட் கொடுத்த அதிரடி

ரூ.2.5 கோடி இழப்பீடு கேட்ட காஜல் அகர்வாலுக்கு கோர்ட் கொடுத்த அதிரடி

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை காஜல் அகர்வால் விவிடி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். தான் அந்த நிறுவனத்திற்கு நடித்து கொடுத்த விளம்பரத்தை அவர்கள் ஒருவருடம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், ஆனால் அந்நிறுவனம் அதற்கு மேலும் பயன்படுத்தி வருவதால் தனக்கு ரூ.2.50 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் மனுதாக்கல் செய்திருந்தார் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து வாதாடிய விவிடி நிறுவனத்தின் வழக்கறிஞர், ஒருவருடம் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று காஜல் அகர்வாலிடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அந்த குறிப்பிட்ட விளம்பர படத்தின் உரிமை விவிடி நிறுவனத்திடம் 60 ஆண்டுகளுக்கு காப்பிரைட் உள்ளது. எனவே காஜல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்டு முடித்த நீதிபதி காஜல் மனுவை தள்ளுபடி செய்ததோடு விவிடி நிறுவனத்தின் வழக்கு செலவை காஜல் கொடுக்க வேண்டும் என்று உத்த
செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: காரணம் என்ன?

செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: காரணம் என்ன?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யும் வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கணவர் அஸ்வின் அவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் தம்பதிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு மனு செய்தனர். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் முடிவில் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

சூர்யா உள்பட 8 முன்னணி நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, சத்யராஜ், சரத்குமார், சேரன், அருண்விஜய், விஜயகுமார், விவேக், ஸ்ரீப்ரியா ஆகியோர்களுக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியானது. இந்த செய்தியில் வேண்டுமென்றே பல அருவருக்கத்தக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த பத்திரிகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் மேற்படி எட்டு நடிகர்களும் பொங்கி எழுந்தனர். ஒரு நடிகர் உச்சகட்டமாக பத்திரிகையாளர்களை கெட்ட வார்த்தை ஒன்றால் திட்டினார். இந்த நிலையில் நடிகர்களின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களின் மனம் பாதிக்கும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் இருந்த