குறிச்சொல்: d.imman

அஜித்தின் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

அஜித்தின் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என கடந்த சில நாட்களாக செய்திகள் உலாவி வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்றுமுன் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இமான் இசையமைப்பது மட்டுமின்றி அஜித்தை ஒரு பாடலை பாட வைக்கவும் அவர் முயற்சி எடுக்கவுள்ளதாகவும் அதற்கு அஜித் சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகும் இந்த படம் ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் பெரும்பாலும் மெலடி பாடல்கள் இருக்கும் என்பதால் இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
சிவகார்த்திகேயன் -பொன்ராம் படத்தின் முக்கிய அப்டேட்

சிவகார்த்திகேயன் -பொன்ராம் படத்தின் முக்கிய அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவான 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது பொன்ராம் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நெபோலியன், சிம்ரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் கம்போஸ் பணிகளை இசையமைப்பாளர் டி.இமான் இன்று முதல் தொடங்கியுள்ளார். இந்த தகவலை டி.இமான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே இதே கூட்டணியில் உருவான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களுக்கும் டி.இமான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.