குறிச்சொல்: deepavali

வசூல் குறித்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்த ‘மெர்சல்

வசூல் குறித்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்த ‘மெர்சல்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளருக்கு ஒருசில கோடிகள் நஷ்டம் என்று பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் மெர்சல் படம் சுமார் ரூ.300 கோடி வசூலை பெற்றிருக்கும் நிலையில் இந்த தயாரிப்பாளர் கிளப்பிய வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் சினிமா ஆரம்பமான காலத்தில் இருந்து இன்று வரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படத்தின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் விஜய்யின் மெர்சல் படம் 25வது இடத்தில் உள்ளது. மெர்சல் தவிர இந்த பட்டியலில் ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி படங்கௌம் உள்ளது என்பதும் வேறு எந்த தமிழ்ப்படமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018, பொங்கல்-தீபாவளி இரண்டையும் ஆக்கிரமித்த விஜய்

2018, பொங்கல்-தீபாவளி இரண்டையும் ஆக்கிரமித்த விஜய்

சற்றுமுன், செய்திகள்
பொங்கல் அல்லதி தீபாவளி என்றாலே பண்டிகை மட்டுமின்றி விஜய் படங்களின் ரிலீசும் இருக்கும் என்பதை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறோம். கடந்த தீபாவளி தினத்தில் கூட விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ரிலீசாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த நிலையில் வரும் 2018ஆம் ஆண்டின் பொங்கல், தீபாவளி இரண்டுமே விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்-முருகதாஸ் இணையும் 'தளபதி 62;' படம் வெளியாவது தெரிந்ததே. ஆனால் 2018 பொங்கல் அன்று விஜய் ரசிகர்களுக்கு என்ன விசேஷம் என்ற கேள்வி எழுகிறதா? அன்று தான் ஜீ தொலைக்காட்சியில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 2018ஆம் ஆண்டு பொங்கலும், தீபாவளியும் விஜய் ரசிகர்களின் ஆக்கிரமிப்பில் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
அஜித்தின் அடுத்த பட டைட்டில் ‘விஸ்வாசம்

அஜித்தின் அடுத்த பட டைட்டில் ‘விஸ்வாசம்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'விஸ்வாசம்' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து 'விஸ்வாசம்' என்ற அடுத்த V டைட்டில் வைக்கபட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி 2018 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

விஜய்க்கு பயந்து பின்வாங்கிவிட்டாரா சிவகார்த்திகேயன்?

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் வேறு சில படங்களின் அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இரண்டு பெரிய படங்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் திடீரென பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. வேலைக்காரன் திரைபப்டம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி அல்லது பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கல் தெரிவிக்கின்றன.
குறைந்த பட்ஜெட்: தீபாவளி ரிலீஸ்: அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்

குறைந்த பட்ஜெட்: தீபாவளி ரிலீஸ்: அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தின் 58வது படத்தையும் இயக்குனர் சிவா இயக்குகிறார். ஆனால் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் கிராமத்தில் நடக்கும் செண்டிமெண்ட் கலந்த கதை. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்குவதாகவும், இந்த படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.