குறிச்சொல்: Devi

மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா

மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா

சற்றுமுன், செய்திகள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘தேவி’ படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய், ஜெயம் ரவியை வைத்து ‘வனமகன்’ என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் வெளிவந்து ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவியை வைத்து ‘கரு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா மீண்டும் நடிக்கப்போவதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ‘தேவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த பிரபுதேவா, தொடர்ந்து ‘யங் மங் சங்’, ‘குலேசபகாவலி’, ‘மெர்குரி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கார்த்தி, விஷால் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இய