குறிச்சொல்: Dhanshika

தன்ஷிகாவின் ‘காத்தாடி’ படத்தின் டிரைலர்

தன்ஷிகாவின் ‘காத்தாடி’ படத்தின் டிரைலர்

சற்றுமுன், வீடியோ
கபாலி படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவை அள்ளிய தன்ஷிகா போலீஸ் கேரக்டரில் நடித்த 'காத்தாடி' படத்தின் டிரைலர் இதோ: https://www.youtube.com/watch?v=nxYRFxtH7j0
டி.ஆர். எல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? பொங்கிய தன்ஷிகா

டி.ஆர். எல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? பொங்கிய தன்ஷிகா

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் 'விழித்திரு' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது தன்ஷிகாவை டி.ராஜேந்தர் வார்த்தைகளால் கடுமையாக தாக்கியதை அனைவரும் மறந்திருக்க முடியாது. ஒரு பெண் என்றும் பாராமல், தெரியமால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் தன்ஷிகாவை தொடர்ந்து டிஆர் அவமானப்படுத்தியதை திரையுலகினர் கண்டித்தனர். இந்த நிலையில் முதல்முறையாக இந்த விஷயம் குறித்து மனம் திறந்து பொங்கியெழுந்துள்ளார் தன்ஷிகா. சமீபத்தில் நடந்த 'விழித்திரு' திறனாய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து தன்ஷிகா கூறியதாவது, "டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் என பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்த சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஒரு ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேசமாட்டார். எனக்கு அதிகமாகக் கோபம் வரும்
தன்ஷிகாவை அழவைத்த விவகாரம்: டி.ஆருக்கு விஷால் கண்டனம்

தன்ஷிகாவை அழவைத்த விவகாரம்: டி.ஆருக்கு விஷால் கண்டனம்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நடந்த ‘விழித்திரு’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையில் தனது பெயரை சொல்லவில்லை என்பதற்காக டி.ராஜேந்தர் அவரை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். டி.ராஜேந்தரின் பேச்சால் மேடையிலேயே தன்ஷிகா கண்ணீர் விட்டு அழ நேர்ந்தது. இதனால், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தன்ஷிகாவை பொதுமேடையில் கடுமையாக விமர்சித்த டி.ஆருக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டி.ஆர். அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர்
பொதுமேடையில் தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தர்

பொதுமேடையில் தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தர்

சற்றுமுன், செய்திகள்
கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘விழித்திரு’. இப்படத்தை இயக்குனர் மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் வந்திருந்தார். டி.ராஜேந்தர் இப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் தன்ஷிகா பேசும்போது எல்லோரையும் பற்றி பேசிவிட்டு டி.ஆரை பற்றி பேச மறந்துவிட்டார். இதை அந்த மேடையிலேயே தன்ஷிகாவிடம் டி.ஆர் கேட்டுவிட்டார். அவர் சொல்லும்போது, சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால், இந்த டி.ஆர் யாரென்று தன்ஷிகா கேட்டுக் கொண்டிருக்கிறது. நீயெல்லாம் என் பெயரைச் சொல்லியா நான் வாழப் போகிறேன்? ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவை பற்றியா கவலைப்படப் போகிறேன் என தனது நடையில் பேச ஆரம்பித்தார். உடனே, தன்ஷிகா எழுந்