குறிச்சொல்: dheeran adhigaram ondru

விஜயுடன் மோதத் துணிந்த கார்த்தி

விஜயுடன் மோதத் துணிந்த கார்த்தி

சற்றுமுன், செய்திகள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால்,சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட மெர்சல் தீபாவளி அன்று வெளியாகிறது. இதனால் பல படங்கள் தீபாவளி ரேசிலிருந்து விலகின. இந்த நிலையில் கார்த்தி தனது படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சிறுத்தைக்கு பின் போலீஸ் வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி ரேசில் மெர்சலுக்கு போட்டியாக இறங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வர உள்ளது.