குறிச்சொல்: Diector Cheran

தோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு

தோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
சில வருடங்களாக திரைப்படங்களை இயக்காமலும், நடிக்காமலும் இருந்த சேரன் தற்போது புதிய படங்களை இயக்கவுள்ளார். சேரன் கடைசியாக இயக்கிய படம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை. இப்படத்திற்கு பின் சேரன் எந்த படத்தையும் இயக்கவில்லை. மேலும், எந்த திரைப்படத்திலும் நடிக்கவுமில்லை. இந்நிலையில், அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: என் இதயம் நிறைந்த அன்பு ரசிகர்களே..தொடர்ந்து எனக்கும் என் திரைப்படங்களுக்கும் ஆதரவு அளிக்கும் தமிழ் பண்பாளர்களே வணக்கம்.. மூன்று வருடங்களாக புதிய முயற்சி என்ற நோக்கில் மலையை புரட்டிப்போட்டுவிடலாம் என முயன்று முட்டி முட்டி முடியாமல் தோற்றுப்போனேன்.. பிறகுதான் புரிந்தது இங்கே சிறுகல்லை நகர்த்தக்கூட முடியாத அளவு தவறுகளும் பொறாமையுணர்வுகளும் பரந்தமனப்பான்மை இன்மையும் புரையோடிப்போயிருக்கிறது என..  எனவே இந்த சமூக மாற்றம் எ