குறிச்சொல்: digital

தமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்

தமிழ் சினிமாவில் திருத்தங்கள் தேவை: விஷால்

சற்றுமுன், செய்திகள்
இப்போது நடந்துகொண்டிருப்பதை என்னால் ஸ்ட்ரைக் என்று சொல்ல முடியாது. இது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியை புதுபிக்க , திருத்தங்கள் செய்ய , புத்துணர்ச்சியடைய செய்ய நாங்கள் எடுத்துள்ள முடிவு என்று சொல்லலாம். GSTக்கு பின் தமிழ் சினிமாவில் இந்த திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதில் முதலாவது கியூப் பிரச்சனை , இதை கியூப் பிரச்சனை என்று சொல்லுவதே முதலில் தவறு. DSP ( Digital Service Provider ) பிரச்சனை என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களுக்கு DSP குறைந்த கட்டணத்தை தான் வாங்குகிறார்கள். ஆனால் நம்முடைய படங்களுக்கு தான் இருப்பதுலேயே மிகவும் அதிகமான கட்டணத்தை வாங்குகிறார்கள். யு.எஸ்.ஏ , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் படத்தை திரையிடVPF ( Visual Projection Fees ) கட்டணம் என்பதே கிடையவே கிடையாது. நாங்களும் அதே போல் இங்கே கட்டவேண்டிய தேவையே இல்லை. நாங்கள் பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு அதிக கட்டண
ரூ.400 கோடி பட்ஜெட் படத்தில் கமல்ஹாசன் – கலைப்புலி தாணு

ரூ.400 கோடி பட்ஜெட் படத்தில் கமல்ஹாசன் – கலைப்புலி தாணு

சற்றுமுன், செய்திகள்
உலக நாயகன் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ரவீனா தண்டன் உள்பட பலர் நடித்த திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டிலேயே இந்த படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் அப்போது பத்திரிகையாளர்களால் பாராட்டப்பட்டாலும் பாமர ரசிகர்கள் இந்த படத்தை ரசிக்கவில்லை. எனவே இந்த படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் 15 வருடங்களுக்கு முன்பே நவீன டெக்னாலஜி, சூப்பர் கிராபிக்ஸ், மோஷம் கேப்ட்சர் என டெக்னிக்கலாக அசத்திய படம் ஆளவந்தான் இந்த படம் தற்போது டிஜிட்டல்மயமாகி வருகிறது. விரைவில் டிஜிட்டல் பணியை முடித்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதால் தாணு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.