குறிச்சொல்: Director rajamouli

அமீர்கானுடன் சந்திப்பு ; அடுத்த கதை மகாபாரதமா? – ராஜமௌலி பரபரப்பு தகவல்

அமீர்கானுடன் சந்திப்பு ; அடுத்த கதை மகாபாரதமா? – ராஜமௌலி பரபரப்பு தகவல்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் பாலிவுட நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பாகுபலி 2 படம் விரைவில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு, ராஜமௌலி தனது கனவு படமான மகாபாரத கதை சினிமாவாக எடுக்கப்போகிறார் எனக் கூறப்பட்டது. மேலும், சிலமாதங்களுக்கு முன்பு மகாபாரத கதை தொடர்பாக ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரை சந்தித்து ராஜமௌலி பேசியதாக செய்திகள் வெளியனது. ஆனால், இதுபற்றி ராஜமௌலி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், அமீர்கானுடன் ராஜமௌலி பேசியது உண்மைதான் எனவும், ஆனால் மகாபாரத கதையை தற்போது இயக்கவில்லை என பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி “ நான் அமீர்கானை சந்தித்து பேசியது உண்மை
ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..

ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட ராஜமௌலி..

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.ராஜமௌலி அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.. பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி-2 விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய ராஜமௌலி, முதலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும், அதற்காக தற்போது வெட்கப்படுவதகாவும் தெரிவித்தார். முன்னதாக, அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை லட்சுமி மஞ்சுவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், ராணாவிற்கு அம்மாவாக நடிக்க அவர் சம்மதம் தெரிவிக்காததால், அந்த வேடம் ரம்யா கிருஷ்ணனுக்கு சென