குறிச்சொல்: director rajesh

இயக்குனர்  ராஜேஷ் நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இணைகிறார்!

இயக்குனர் ராஜேஷ் நடிகர் சந்தானத்துடன் மீண்டும் இணைகிறார்!

சற்றுமுன், செய்திகள்
சந்தானம் சின்னத்திரையிலிருந்து வெள்ளிதிரைக்கு வந்து காமெடியனாக கால் பதித்து தற்போது ஹீரோவாக உருமாறியுள்ளாா். சிம்பு படத்தில் முதன் முதலில் நகைச்சுவை நடிகனாக அவதாரம் பூசினாா். இவரது படம் என்றாலே காமெடி தூக்கலாக தான் இருக்கும். அப்படி பட்டவா் இப்ப ஹீரோவாக நடித்து வருவதால் அவரது காமெடி படம் எப்போது வரும் என்ற எதிா்பாா்ப்பு ரசிகா்களிடையே எழுந்துள்ளது. ரசிகா்களின் அந்த எதிா்பாா்ப்பு தற்போது நிறைவேற போகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஓர் கண்ணாடி போன்ற ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ராஜேஷ். இத்திரைப்படங்கள் பெரிதும் மக்களை சேர்ந்தடைந்ததற்கு காரணம் சந்தானத்தின்  காமெடி தான். ராஜேஷ், சந்தானம் கூட்டணியில் ஒரு படம் வருகிறது என்றாலே மக்களிடையில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நம்மை வயிறுகுலுங்க சிரிக்க வைப்பதுதான் இவ்விருவரின் குறி