குறிச்சொல்: Director ranjith

கபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்!!!

கபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்!!!

சற்றுமுன், செய்திகள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கபாலி.  இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்தார். இந்த தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினி நடித்துள்ள 2.௦ படம் தீபாவளி அன்று  வெளியீட உள்ளனர். இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கபாலி கதாபாத்திரத்தை விட மிக வலிமையாகவும், புதிதாகவும் இருக்கும் என்கின்றார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது  . மேலும்  இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பு சட்டை இயக்குனரை பாராட்டி தள்ளிய பா.ரஞ்சித்

பாம்பு சட்டை இயக்குனரை பாராட்டி தள்ளிய பா.ரஞ்சித்

பிற செய்திகள்
சமீபத்தில் வெளியான பாம்பு சட்டை படத்தில் இடம் பெற்றிருந்த கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் பாராட்டி பேசியுள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆடம்தாசன் இயக்கி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பாம்பு சட்டை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படத்தின் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது தந்தையாக நடித்துள்ள சார்லி ஆகியோரின் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டப்படுகிறது. இதுபற்றி இப்படத்தின் இயக்குனர் கருத்து தெரிவித்த போது, என் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்ய ஒரு இளம்பெண் வருவார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார். அவருக்கு ஒரு காதல் இருந்தால் எப்படியிருக்கும் என யோசித்த போது உருவான கதைதான் இந்த பாம்புசட்டை. படம் பார்த்த அனைவரும் கீர்த்திசுரேஷின் கதாபாத்திரம் பற்றி பேசுவது மகிழ்ச