குறிச்சொல்: Directors

கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு

கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு

Uncategorized
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகி வந்த 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'; என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இழுத்தடித்தால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் என இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம், உடனடியாக இந்த புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இந்த நோட்டீஸை வடிவேலு கண்டுகொள்ளவே இல்லை இதனையடுத்து ஷங்கர் கொடுத்த அழுத்தம் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒன்று படத்தில் நடித்து கொடுங்கள், அல்லது வாங்கிய அட்வான்ஸ், போடப்பட்ட செட்டின் மதிப்பு மற்றும் வட்டி ஆகியவைகளுக்காக ரூ.9 கோடி உடனே கட்டுங்கள் என்று வடிவேலுவுக்கு கெடு விதித்துள்ளதாம் தயாரிப்பாளர
ஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்

ஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்

சற்றுமுன், செய்திகள்
நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போனார். அதன்பின் தற்போது அவர் ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது ஏற்கனவே ஷங்கரின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷங்கர், வடிவேலு மீது புகார் கூறியிருக்கும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆர்.கே 'நானும் நீயும் நடுவுல பேயும்' என்ற படத்திற்காக வடிவேலுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்ததாகவும், ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வருவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் ஜிவி பிரகாஷ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு, அந்த படத்தின் தனது காட்சிகளை மாற்றும்படி இம்சை கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
ராகுல் ப்ரித்திசிங் எச்சரிக்கை: அதிர்ச்சியில் இயக்குனர்கள்

ராகுல் ப்ரித்திசிங் எச்சரிக்கை: அதிர்ச்சியில் இயக்குனர்கள்

சற்றுமுன், செய்திகள்
தன்னுடைய கேரக்டரை டம்மியாக்கும் இயக்குனர்களின் படங்களில் இருந்து விலகிவிடுவேன் என்று பிரபல நடிகை ராகுல் ப்ரித்திசிங் எச்சரிக்கை விடுத்துள்ளது அவரை வைத்து படம் இயக்கி வரும் இயக்குனர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் ரீஎண்ட்ரி ஆன ராகுல் ப்ரித்திசிங், அந்த படம் பிளாப் ஆன போதிலும் சூர்யா-செல்வராகவன் படம், கார்த்தியின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மற்றும் இந்தி படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ராகுல் படங்களில் ஒன்றில் இன்னொரு பிரபல நாயகி ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இதனால் ராகுலின் கேரக்டர் டம்மியாக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்தே இந்த எச்சரிக்கையை ராகுல் விடுத்துள்ளார். ஆனால் அவர் இந்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு என குறிப்பிட்டு சொல்லவில்லை.
இயக்குனர்கள் சரியில்லை – சுஜா வருணி பாய்ச்சல்

இயக்குனர்கள் சரியில்லை – சுஜா வருணி பாய்ச்சல்

பிற செய்திகள்
நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை பல இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை என நடிகை சுஜா வருணி கருத்து தெரிவித்துள்ளார். 5 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா உலகில் காலெடுத்து வைத்தவர் சுஜா வருணி. கதாநாயகி இடத்தை பிடிக்க வந்த அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை. தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடிகர், நடிகைகள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் தெரிவிக்காமலே, அவர்கள் நடித்த காட்சிகளை இயக்குனர்கள் கத்தரித்து விடுவார்கள். எனக்கு இது பல முறை நடந்துள்ளது. இன்னும் பல நடி