குறிச்சொல்: Divorce

செளந்தர்யா ரஜினிக்கு விவாகரத்து. அடுத்த திருமணம் எப்போது?

செளந்தர்யா ரஜினிக்கு விவாகரத்து. அடுத்த திருமணம் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் செளந்தர்யாவுக்கும் இளம் தொழிலதிபர் அஸ்வின் அவர்களுக்கும் கடட்ந்ஹ 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்து இருவருக்கும் 'வேத்' என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் நேரில் ஆஜராகி விவாகரத்து முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர் இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் செளந்தர்யாவுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. ஆனால் மறுதிருமணம் குறித்து இருவருமே எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: காரணம் என்ன?

செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்: காரணம் என்ன?

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், 'விஐபி 2' படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யும் வழக்கின் விசாரணை இன்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது. மேலும் அவரது கணவர் அஸ்வின் அவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் தம்பதிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்து விவாகரத்துக்கு மனு செய்தனர். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் முடிவில் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணவரை விவாகரத்து செய்தாரா ‘சிவகாமி’ ரம்யாகிருஷ்ணன்?

கணவரை விவாகரத்து செய்தாரா ‘சிவகாமி’ ரம்யாகிருஷ்ணன்?

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களிலும் ராஜமாதா சிவகாமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்திற்கு அவருக்கு சம்பளமாக ரூ.3 கோடி கிடைத்தது மட்டுமின்றி வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா, தமிழ் நெடுந்தொடர் என சென்னையில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருப்பதால் அவர் ஐதராபத்தில் இருந்து தற்போதைக்கு சென்னையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் மகனுடன் உள்ளார். அதேபோல் ரம்யா கிருஷ்ணனின் கணவரும் இயக்குனருமான வம்சிகிருஷ்ணன் தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பதாக ஐதராபாத் வீட்டில் உள்ளார் ஆனால் இதைவைத்து ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்துவிட்டதாகவும், மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் சிலர் கதைகட்டி விட்டனர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ரம்யாகிருஷ்ணன், 'நானும் என் கணவரும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி டான்ஸ் ஆட
விஜய்-அமலாபாலுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்…

விஜய்-அமலாபாலுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்…

பிற செய்திகள்
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மைனா படம் தமிழ் பட உலகில் பிரபலமானவர் அமலாபால். அதன்பின் இவர் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்களின் திருமணம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நடைபெற்றது. ஆனால், திருமணமான 2 ஆண்டுகளில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  அதன் பின் அவர்கள் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.