குறிச்சொல்: dmk

ரஜினி எடுத்த அரசியல் சர்வே! அதிர்ச்சியில் திமுக

ரஜினி எடுத்த அரசியல் சர்வே! அதிர்ச்சியில் திமுக

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து தனது ரசிகர்கள் முன் பேசுவதற்கு முன் பெங்களூரை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் தான் அரசியலுக்கு வந்தால் தனக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது குறித்து ஒரு சர்வே எடுக்க சொன்னாராம் அந்த சர்வே குழுவில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளும் ஒருசில தேசிய பத்திரிகையாளர்களும் இருந்தனர். அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எடுத்த சர்வேயின் முடிவில் ரஜினிக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றாக ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிந்ததாம் இதற்கு பின்னர்தான் சிஸ்டம் சரியில்லை, போர் வந்தால் பார்த்துக்குவோம் என்று களத்தில் இறங்கிவிட்டாராம் ரஜினி. அதுமட்டுமின்றி கட்சி சின்னம், கொடி ஆகியவையும் தயாராகிவிட்டது என்றும், வரும் செப்டம்பரில் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.