குறிச்சொல்: dubbing

தமிழ்நாடு வேண்டாம்! ஆந்திராவுக்கு போயிடுவோம்: அஜித்தின் அதிரடி முடிவு

தமிழ்நாடு வேண்டாம்! ஆந்திராவுக்கு போயிடுவோம்: அஜித்தின் அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் கடந்த சில வருடங்களாக எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசுவதில்லை, ஏன், அவருடைய படங்களின் புரமோஷனுக்கு கூட அவர் செல்வதில்லை. மேலும் மற்ற நடிகர்கள் போல் சமூக, அரசியல் பிரச்சனையில் கருத்து சொல்வதும் இல்லை இந்த நிலையில் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டப்பிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அஜித் மட்டுமே பின்னணி குரல் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கும் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென அஜித், படத்தயாரிப்பாளரிடம் சென்னை வேண்டாம், டப்பிங்கை ஐதராபாத்துக்கு மாத்துங்கள், அங்கு வந்து பேசி தருகிறேன் என்று கூறிவிட்டாராம். படக்குழுவினர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அஜித்தை எதிர்த்து பேச முடியாததால் அதற்கும் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தை கடைசியில் தள்ளிய சிறுத்தை சிவா? காரணம் என்ன?

அஜித்தை கடைசியில் தள்ளிய சிறுத்தை சிவா? காரணம் என்ன?

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது உறுதி ஆகிவிட்டது என்பதால் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. ஆனால் 'விவேகம்' படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் கடைசியில்தான் டப்பிங் செய்வார் என்றும் அவருக்கு முன்னர் இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகையர் டப்பிங் செய்வார்கள் என்றும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர் பெறுகிறது ‘விஸ்வரூபம் 2’. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

உயிர் பெறுகிறது ‘விஸ்வரூபம் 2’. கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

சற்றுமுன்
உலக நாயகன் கமல்ஹாசன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளியிட்ட திரைப்படம் 'விஸ்வரூபம்'. கடந்த 2013ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவே வலியவந்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு இந்த படத்தின் பிரச்சனை தீவிரமாகியது. பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது நாட்டைவிட்டே வெளியேறுவேன் என்று கமல் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'விஸ்வரூபம் 2' வெளிவருமா? வெளிவராதா? என்று இருந்த நிலையில் தற்போது இந்த படம் உயிர் பெறுகிறது. ஆம், இன்று முதல் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கிவிட்டதாக கமல் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கவுள்ளதாகவும், முதல்கட்டமாக கமல் அதனையடுத்து ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்பட வரிசையாக ஒவ்வொருவரும் டப்பிங் செய்ய உள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டி