குறிச்சொல்: Election

விஷாலுக்கு நெருக்கடி கொடுக்க ஞானவேல்ராஜா எடுத்த அதிரடி முடிவு

விஷாலுக்கு நெருக்கடி கொடுக்க ஞானவேல்ராஜா எடுத்த அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நிமிடமே அவர் தனது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக இயக்குனர் சேரன் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் நேற்று சென்னை-செங்கல்பட்டு விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்தார். சேரனின் கோரிக்கை தன்னை நோக்கியும் திரும்புவதற்கு முன்பே அவர் தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். ஞானவேல்ராஜாவின் ராஜினாமா விஷாலுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலவே விஷாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேரன் குழுவினர் தற்போது உரத்த குரலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
விஷாலை அடுத்து ஞானவேல்ராஜாவும் போட்டி?

விஷாலை அடுத்து ஞானவேல்ராஜாவும் போட்டி?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட சற்றுமுன்னர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகிய ஞானவேல்ராஜாவும் தேர்தல் ஒன்றில் போட்டியிடவுள்ளார். ஆனால் அவர் போட்டியிடவுள்ளது விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெறவுள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் ஆர்.கே.நகரில்லும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானவேல்ராஜா விநியோகிஸ்தர் சங்கத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
விஷாலுக்கு விசில் சின்னம் கிடைக்குமா?

விஷாலுக்கு விசில் சின்னம் கிடைக்குமா?

சற்றுமுன், செய்திகள்
ரஜினி, கமல் போல் இல்லாமல் அதிரடியாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அரசியலில் குதித்த விஷால் இன்று வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன் நேராக ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்ற விஷால் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனுவில் தனக்கு விசில் சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே சின்னத்தை டிடிவி தினகரனும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கமிஷன் இந்த சின்னத்தை யாருக்கு வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றும் விஷால் அணி?

தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றும் விஷால் அணி?

சற்றுமுன்
தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது அணியினர் மற்றவர்களும் முன்னிலையில் உள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு
தயாரிப்பாளர் சங்க தேர்தல் : விஷால் வெற்றி

தயாரிப்பாளர் சங்க தேர்தல் : விஷால் வெற்றி

சற்றுமுன்
தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்தது. அதில் தலைவர் பதவிக்கு ப
தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தது

தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்தது

சற்றுமுன்
தமிழ் பட சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை தொடங்கி, மாலை முடிவடைந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 ஆண்டிற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த தேர்தல் இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் விஷால், ராதாகிருஷ்ணன், கேயார் உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன. இன்று காலை சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குனர் சுந்தர் சி, ராதிகா சரத்குமார், ரா. பார்த்திபன், நாசர். பி.வாசு உள்ளிட்ட பல சினிமா தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இன்று மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஒட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தற்போது விஷால் அணியினர் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளிய